பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஆனந்த ஓவியம் 9. கேள்வி: நுண்ணிய காரியம் எண்ணித் துணிக' இந்தியாவின் தற்கால அரசியலிலிருந்து உதாரணங் கூறி விளக்குக. பதில்: இராஜாங்கக் காரியங்களில் சின்ன விஷய மாயிற்றே என்று அலட்சியம் செய்துவிடக்கூடாது. தீர யோசித்தே செய்யவேண்டும். உதாரணம்: அப்பா சாகிப் பட்டவர்த்தன் என்னும் அரசியல் கைதி சிறைக்கூடத்தில் கக்கூஸ் சுத்தம் செய்கிறேன் என்று சொன்னார். சுத்தம் செய்துவிட்டுப் போகட்டுமே என்று சூபரின்டெண்ட் விட்டு விடவில்லை. முடியாது என்று சொல்லிவிட்டார். அந்தக் கைதி பிறகு அதற்காகப் பட்டினி கிடக்கலானார். இதை முன்னிட்டு மற்றொரு கைதியான காந்தியும் பட்டினி கிடக்க ஆரம்பித்தார். பிறகு பம்பாய் அரசாங்கம் இவ் விஷயத்தைக் கவனிக்கத் தொடங்கியது. சிறைச்சாலை இலாக்கா இன்ஸ்பெக்டர் ஜெனரல், கைதி காந்தியிடம் சென்று, அது விஷயம் யோசனை செய்யப்படுமென்றும் பட்டினியை நிறுத்தும்படியும் சொன்னார். காந்தியும், பட்ட வர்த்தனரும் அப்படியே செய்தார்கள். இரண்டு மாத காலம்வரையில் சிறைக்கூடத் தலைவருக்கும். பம்பாய் அர சாங்கத்துக்கும். டில்லி அரசாங்கத்துக்கும், லண்டனுக்கும் கடிதங்களும் தந்திகளும் போய் வந்துகொண் டிருந்தன. இதற்குள் பட்டவர்த்தன் மறுபடியும் பட்டினி தொடங்கப் போவதாகப் பயமுறுத்தினார். கடைசியில், 1729 கடிதங் களும். 397 தந்திகளும் போய்வந்த பிறகு, கைதி பட்ட வர்த்தன் மற்ற வேலைகளுக்குக் குந்தகமில்லாமல் சிறைச் சாலைக் கக்கூஸ்களைக் கூட்டலாம் என்று அநுமதி பிறந்தது. நீதி: அரசியலில் நுண்ணிய காரியமும் எண்ணித் துணியவேண்டும். 10. கேள்வி: பின்வரும் விஷயங்களைக் குறித்து. உனக்குத் தெரிந்தவைகளை எழுது: (1) இமய மலை (2) மோர் (3) பட்டாசு. பதில்: 1. இமயமலை இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரியதோர் அபாயமாயிருக்கிறது. இமய மலைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/61&oldid=1721445" இலிருந்து மீள்விக்கப்பட்டது