பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் பரீட்சை • 65 மகாத்மா காந்தி என்னும் இராஜாங்கப் புரட்சித் தலைவருக் கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. 'இந்தியாவில் பார்க்கத் தகுந்தவை இரண்டு. ஒன்று இமயமலை, இரண்டு மகாத்மா காந்தி' என்று வெளிநாட்டார் கருதுகிறார்கள். மகாத்மா காந்தியும் அடிக்கடி இமய மலையை உதாரணமாக எடுத்துச் சொல்கிறார். தாம் செய்யும் தவறுகளையுங்கூட இமாலயத் தவறுகள்' என்கிறார். 'இமய மலையை அசைக்க முடியாதது போல் சத்தியத்தையும் அசைக்க முடியாது' என்கிறார். ஆகையால் இமய மலையை இப்போது உள்ள இடத்திலிருந்து அப்புறப்படுத்திச் சந்திரமண்டலத்துக்கோ, செவ்வாய்க் கிரஹத்திற்கோ வேண்டும். அனுப்பிவிடப் பிரயத்தனம் செய்ய 2. பாலைக் காய்ச்சி உறை குத்திப் புளித்தபின் கடைந்து வெண்ணெய் எடுத்த பிறகு பாக்கி நிற்கும் திரவ பதார்த்தம் மோர் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இந்த மோரில் விடமின் என்னும் ஜீவ சத்து இருப்பதாகவும், அதனால் தேகாரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது என்றும் இது காறும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இப்போது மோரில் விடமின் அல்லாது வேறொரு பயங்கரமான, கண்ணுக்குத் தெரியாத கிருமி இருப்பதாகவும், அது மனிதர் களுடைய இரத்தத்தில் இராஜத் துவேஷ உணர்ச்சியை ஊட்டுவதாகவும் தெரிய வருகிறது. இதைக் கண்டு பிடித்த வர் சென்னை சென்னை சர்க்காரின் லா மெம்பர் ஸர் கிருஷ்ணன் நாயர் அவர்கள். ஆகையால் பொதுவாக இந்தியா தேசத் திலும், முக்கியமாகப் பள்ளிக்கூடங்கள் கலாசாலைகளில் உள்ள ஹாஸ்டல்களிலும் மோரின் உபயோகத்தைக் குறைப் பதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும். தற்போது கூடிய வரையில் மோரின் தீய சக்திகளைக் குறையச் செய்துவரும். இடையர் இடைச்சிகளுக்கு சர்க்கார் நன்கொடை அளித்து. ஊக்கப்படுத்துவதுடன், அவர்களுக்கு வேண்டிய தண்ணீர் 'ஸப்ளை'யும் செய்து வரவேண்டும். 3. இதுகாறும் பட்டாசு என்பது தீபாவளியின்போது சிறுவர் சிறுமியர் வெடிக்கச் செய்து மகிழும் விளையாட்டுச் சாமானாக இருந்து வந்தது. சமீபத்தில் அது சென்னை சட்ட சபையின் தீர வீர அங்கத்தினர்களைப் பயப்படுத்திச் சிதறி ஓடச் செய்வதற்குக் காரணமாயிருந்தபடியால், பட்டாசுக் கட்டு இறக்குமதியைத் தடுத்துவிடுவது அவசியமாகும். அதனால் சர்க்காரின் இறக்குமதி வரியில் ஏற்படும் குறைவை, தீபாவளி வரி ஒன்று ஏற்படுத்தி வசூலித்து ஈடு செய்யலாம். 8.9.1-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/62&oldid=1721446" இலிருந்து மீள்விக்கப்பட்டது