8. வியாதிக்கு ஸ்நானம் " சகுணப் பிரம்மம் நல்லதா? நிர்க்குணப் பிரம்மம் நல்லதா?' என்று என்னைக் கேட்பீர்களாயின், 'நிர்க்குணப் பிரம்மந்தான் எனக்குப் பிடித்திருப்பது' என்று தயங்காமல் று பதில் கூறுவேன். போதும் ஐயா, போதும்! இந்த எண் சாண் உடம்பைக் கட்டிக்கொண்டு நான் மாரடிப்பது போதாதா? எம்பெருமானாவது; உடம்பும் அதனால் ஏற்படும் தொல்லைகளும் இல்லாதவராயிருக்கட்டுமே! அதிலும் இறைவனைச் சகுணப் பிரம்மமாக வைத்துக் கொண்டால் நம்மையெல்லாம் போல் சாதாரண உடம்பா அவருக்கு? ஸஹஸ்ர சீர்ஷா புருஷ : ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் எப் ஆண்டவனே! கேவலம் ஒரு தலையும். இரண்டு கண் ணும், இரண்டு காலும் உடைய எங்களாலேயே இவ்வுடம்பை நோய்கள், மருந்துகள் டாக்டர்களிடமிருந்து தப்ப வைத் துப் பாதுகாத்தல் பிரம்மப் பிரயத்தனமாயிருக்கிறதே; ஆயி ரந் தலைகளும் அதற்கேற்ற மற்ற அவயவங்களும் உடைய பகவானுடைய கதி என்ன? உதாரணமாக, பகவான் போதேனும் தமது அருமைப் பக்தன் எவனையாவது நினைத் துக்கொண்டு ஒரு துளி கண்ணீர் விடுகிறார் என்று வைத்துக் கொள்ளலாம். அந்தச் சமயம் கண் வைத்தியர் ஒருவர் பகவானைத் தப்பித் தவறிக் கண்டுபிடித்து கண்ணில் கெடு தல் என்றும், கண்ணாடி போட்டுத்தான் ஆகவேண்டு மென்றும் சொல்லிவிடுகிறார். சுவாமி! பகவானே! சென்னை யிலுள்ள கண்ணாடிக் கடைகளில் எல்லாம் சேர்ந்து தங்க ளுக்குப் போதுமான மூக்குக் கண்ணாடிகள் கிடைக்குமா? சந்தேகம்! சந்தேகம்! குருமணி மகுடகோடி முடித்தலை குலுங்கும் வண்ணம் இருபது செவியினூடு நுழைந்ததவ் வெழுந்த ஓசை'
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/63
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை