70 ஆனந்த ஓவியம் மாதத்துக்கு ஒரு தடவைதான் எனக்கு ஜலதோஷம் வரும். நாளடைவில் மாதத்துக்கு ஒரு தடவை அதன் விஜயத்தை எதிர்பார்க்கும் நிலைமை ஏற்பட்டது. பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, அப்புறம் வாரத்தில் மூன்று நாலு நாள் ..கடைசியாக ஜலதோஷமில்லாத நாளே இல்லை யாயிற்று. இந் நிலைமையில் நான் அடைந்த அநுகூலங்கள் பல. முக்கியமாக, புதிய மனிதர்களை அறிமுகம் செய்துகொள்வ தற்கு ஜலதோஷம் ஒரு சிறந்த சாதனமென்று கண்டேன். ரெயிலில் ஏறி, உட்கார வேண்டியதுதான் தாமதம். எதிரில் இருப்பவர், 'என்ன ஸார்! ஜலதோஷம் போலிருக்கு' என்று பேசத் தொடங்கிவிடுவார். 'ஆமாம்!' என்றதும் வைத் தியம் சொல்ல ஆரம்பிப்பார். கொஞ்ச நாளைக்கெல்லாம் இவ்விஷயத்தில் அளவில் லாத பெருமை கொள்ளலானேன். யாராவது ஜலதோஷ சிகிச்சை சொல்ல ஆரம்பித்தார்களானால், அவர்களை நான் அதிகம் பேச விடுவதில்லை. 'இங்கே பாருங்கள். ஸார்! உங்களுக்கு எல்லா விஷய மும் தெரிந்திருக்கலாம். ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால். இந்த ஜலதோஷ விஷயம் இருக்கிறதே, அதில்மட்டும் நான் தான் 'அதாரிட்டி!'. வேறு யார் சொல்லுவதையும் நான் கேட்க முடியாது. பதினைந்து வருஷத்து அநுபவமா சும்மாவா?" என்றேன். இவ்வளவு பெருமையுடன் இருந்த எனக்கு ஏழெட்டு மாதத்துக்குமுன் கர்வ பங்கம் ஏற்பட்டது. . "கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு என்னும் உண்மையை வெகு நன்றாக உணர்ந்தேன். அதற்கு முன் நான் அறியாத ஒரு புதுச் சிகிச்சை தெரிய வந்தது. அதை அநுசரித்து வருவதில், நேயர்களே! இவ்வளவு. நாளாக என்னுடன் இணைபிரியாதிருந்து வந்த ஜலதோஷம் கடைசியாக விட்டுப் பிரிந்துவிடும்போல் இருக்கிறது. அதை விடத் துக்ககரமான விஷயம் என்னவென்றால், ஜலதோஷ
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/67
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை