74 ஆனந்த ஓவியம் (3) அடிக்கடி குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்தல்- இம் மூன்று முறைகளின்மூலம் மனிதன் கூடிய வரையில் நோயில்லாமல் வாழலாம் என்றும், நம்வசமில்லாத காரணங்களால் நோய் ஏற்பட்டாலும் மருந்தில்லாமலே குணப்படுத்திக்கொள்ளலாமென்றும் ஸ்ரீமான் முதலியார் சொல்கிறார்: கம்பனுடைய கவிதையைப்பற்றிப் பேசுகை எவ்வளவு பரவசமடைகிறாரோ, குளிர்ந்த ஜல ஸ்நானத்தைப்பற்றிப் பேசும்போதும் ஏறக்குறைய அவ்வள வுக்கு அவர் அடைவதைக் காணலாம். யில் இச் ச் சிகிச்சை நேயர்களில் விருப்பமுள்ளவர்கள் முறையைக் கைக்கொண்டு பயன்பெறலா மென்பதற்காகத் தான் இவ்வளவு தூரம் எழுதினேன். ஆனால், வீட்டிலுள்ள பெண் தெய்வங்களின் எதிர்ப்புக்கும் டாக்டர்களின் கோபத் துக்கும் தயாராயிருந்துகொண்டு அவர்கள் இதை ஆரம் பிக்க வேண்டும். யார் அங்கே? டாக்டர் ஸாரா? வாருங்கள், வாருங்கள். உடம்பு செளக்கியமாய் இருக்கிறது ஏதாவது மிக்ஸ்சர் கொடுக்கிறீர்களா?
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/71
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை