g காட்டுக்கனிகளைக் களிப்புடன் தின்று சீறும் சிங்கத்துடன் சிறப்பாகப் போராடும் காண்டாமிருகங்களும், சில சமயம் தரையிலும் சில சமயம் நீரிலும் வாழும் இயல் பினதாகிய நீர்யானைகளும் ஏராளமாக இருக்கின்றன. காடுகளில் இரண்டு ஆள் உயரத்துக்குமேல் வளரும் புற்களை வெட்ட ஜூன் முதல் அக்டோபர்வரை இரவில் காடுகளில் தீ வைப்பதும், உயிரினங்களை வேட்டையாடு வதும் வழக்கம். கால நிலை வெயிலின் ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியில் கொடுமை மிகுதி. பெரும்பாலும் பிறந்தமேனியராக ஆப்பிரிக்கர்கள் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து வந்திருப்ப தற்கு இதுவே காரணம். நடு ஆப்பிரிக்காவிலும் காங்கோவிலும் சூரியன் நெருப்புப்போல இருக்கிறது. சமீப காலமாக, அங்கே அரசியல் நெருப்பும் பற்றிக் கொண்டிருக்கிறது. கினியா கடற்கரைப் பகுதியில் வெப்பத்தின் கொடுமை கூடுத லாக இருப்பினும், 9 மாதம் மழை பெய்கிறது. வடக்கே மொராக்கோ முதல் கெய்ரோ வரையுள்ள கடலோரப் பகுதி, தென்கோடியில் கேப்டவுன்மாவட்டம், கிழக்காப் பிரிக்காவில் கினியா ஆகிய மூன்று பகுதிகள் வெள்ளைக் காரர்கள் வாழ்வதற்கேற்ற கால நிலையை உடையன. மழை மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கமரூனில் ஓராண் டுக்கு 300 அங்குலம் (கன்னியா குமரி மாவட்டத்தில் 150 அங்குலம்) மழை பெய்கிறது. தென்கிழக்கு ஆப்
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
