10 பிரிக்காவிலுள்ள வால்பிஷ் குடாவில் மூன்று அங்குலம் பெய்கிறது. எனவே அங்கேயும் மழை கொட்டும் மாநிலங்களும் வறண்ட வட்டாரங்களும் உண்டு. புவியியல் வளம் வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தி தவிர, ஆப் பிரிக்காவில் புவியியல் பொருள்களின் உற்பத்தியும் மிகுதி. மங்கையரின் எழிலுக்கு மேன்மேலும் எழி லூட்டும் வைரக்கற்களும் தொழில்வளர்ச்சிக்கு உறு துணையாக உள்ள வைரக்கற்களும் உலகில் உற்பத்தி யாவதில் 100க்கு 99 பங்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிடைப்பன. இவ்வாறே, மனித இனம் தோன்றியது முதல் ஆசை காட்டிவரும் முப்பொருள்களில் ஒன்றான தங்கம் ஆப்பிரிக்காவில் 55 பங்கும் உலகின் ஏனைய பகுதி களிலெல்லாம் சேர்ந்து 45 பங்கும் தோண்டப்படுகிறது. . ஜெட் விமானங்களின் உறுப்புக்கள் செய்ய உதவும் 'கொலம்பைட்டு' என்னும் புவியியல் பொருள் ஆப்பிரிக் காவின் தனி உரிமையாக இருந்து வருகிறது. இந்த உறுப்புக்கள் செய்ய உதவுவதோடு ரேடியம் மருத்துவக் கருவிக்கும் உதவும் 'கோபால்ட்டு' 100 க்கு 86 பங்கு ஆப்பிரிக்காவிலும் 14 பங்கு ஏனைய ஐந்து கண்டங் களிலும் காணப்படுகிறது. ஈயம் (உலக உற்பத்தியில் 10%), செப்பு 16 அண்டிமணி 23%, மங்கனீசு 38 குரோ மியம் 39% ஆகியவையும் ஆப்பிரிக்காவின் அரிய செல்வங்கள். . சீர்ராலியோன், சுவாசிலந்து, லைபீரியா, டூனிசியா, அல்ஜீரியா, கினியா, தங்கனீகா ஆகிய ஆப்பிரிக்க நாடு
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/11
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
