12 சையில் தருவோம். ஏனைய 43 நாடுகளைத் தொகுத்து நான்கு நூல்களில் தருவோம். எகிப்து 4,000 ஆண்டுகளாக உலக நாகரிகத்தின் தொட்டிலாய் அமைந்தது. எத்தியோப்பியா. மூவா யிரம் ஆண்டுகளாக வரலாற்றுச் சிறப்புடையது. கானா கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு முதல் வளர்ச்சி பெற்று, சில நூற்றாண்டுகள் ஒரு பேரரசாகவும் திகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டில், அடிமை நாடாக இருந்த காலத்திலும் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைவிட முன்னேற்றம் அடைந்த நாடு கானா. மேற்கு சூடான் என்னும் பகுதியும் பழமையான நாகரிகம் உடையது. 13- ஆம் நூற்றாண்டளவிலேயே இங்கு நம்நாட்டு நலாந்தா, காஞ்சீபுரம் பல்கலைக் கழகங்கள் நிலவின. போன்ற பிற நாடுகளைப் பற்றிய வரலாறு ஐரோப்பியர் களால் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்தது முதலே இவ்வரலாறு தொடங்குகிறது. 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பியர் முதல் தடவையாக ஆப்பிரிக்க மண்ணில் மிதித்தபோது, இப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நாக ரிகம் என்பதே இன்னதென்று தெரியாதவர்களாகக் காடுகளில் வாழ்ந்ததாகவும், கடலோரப் பகுதிகளில் முதலில் ஐரோப்பியர்கள் இறங்கியபோது அங்கு மக்கள் நடமாட்டமே இல்லை என்றும், உள் உள் நாட்டுக்குள் அவர்கள் சென்றதும் கறுப்பர்களைக் காண நேர்ந்த தாகவும் எழுதி வைத்துள்ளனர். கொலம்பஸ் கண்டு பிடித்த அமெரிக்காவில், சிவப்பு இந்தியர் என்ற இனத் தவர் பெரும்பாலும் அழிக்கப்பட்டு அவர்கள் வாழ்ந்த நாடு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்ற வெள்ளை
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/13
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
