13 யர்களின் உரிமையாகிவிட்டது இவ்வாறே, கொலம்பசுக்கு முன்னரே ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்ற வெள்ளை யர்கள் குடியேறிய ஆப்பிரிக்கப் பகுதிகள் அந்த வெள்ளை யர்க்கும் அவர்கள் வழியினர்க்கும் உரியன என்பதும் வெள்ளையர் பெரும்பாலோரின் வாழ்க்கைத் தத்துவமாகும். வெள்ளையர்களுள் ஆப்பிரிக் காவுக்கு முதலில் வந்தவர்கள் போர்த்துகீசியர்கள்; கடைசியாக ஆப்பிரிக்காவைவிட்டுச் செல்லு பவர்களும் அவர் களாகத்தான் இருப்பார்கள். 'பிரின்ஸ் ஹென் றி தி நாவிகேட்டர்' என்ற போர்த்துக்கீசியர் 1444-இல் இக் கண்டத்தைக் கண் டார். பிறகு 1497-ல் இந்தியாவுக்குச் செல்லும் வழியில் ஆப்பிரிக்காவின் தென் கோடியான நன்னம் பிக்கை முனை (Cape of Good Hope) யை வாஸ்கோட காமா என்ற போர்த்துக்கீசியர் அடைந்தார். போர்த்துக்கீசியருக்குப் பிறகு ஆங்கிலேயர், பிரெஞ் சுக்காரர். டச்சுக்காரர், பெல்ஜியம் நாட்டினர், ஸ்பெயின் நாட்டினர், ஜெர்மானியர், இத்தாலியர் ஆகியோரும் ஆப்பிரிக்காவுக்கு வந்து கடலோரங்களில் அவரவர் விரும்பிய பகுதிகளைப் பிடித்துக்கொண்டனர். 1884- இல் பெர்லினில் நடைபெற்ற ஒரு மாநாட்டில். ஐரோப்பிய அரசுகள், ஆப்பிரிக்காவின் உள் நாட்டுக்குள் ஒவ்வொரு வரும் இன்ன இன்ன இடங்களை வைத்துக்கொள்ளலாம் என்று உடன்பாடு செய்துகொண்டன. கத்தியின்றி இரத்தமின்றி பணச்செலவுமின்றி உலகின் நான்கில் ஒரு பகுதியை அவை தமதாக்கிக் கொண்டன. முதல் உலகப் போருக்குப் பிறகு, 1922-இல் சர்வதேச சங்கத்திற்காக ஆ. I-2
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/14
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
