14 மேற்பார்வை செய்யும் பொறுப்புடன் ஜெர்மன் ஆட்சி யிலிருந்த பகுதிகளைப் பிற ஐரோப்பிய நாடுகள் பங்கு போட்டுக் கொண்டன. இரண்டாவது உலகப் போரின் பயனாக இத்தாலிய ஆட்சி ஆப்பிரிக்காவில் ஒழிந்தது. ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர் வரலாறு 8 பகுதிகளில் அடங்கும்: (1) கடற்பாதை கண்டுபிடிப்பு (2) உள்நாட்டுக்குள் புகுதல் (3) வியாபார நிறுவனங்கள் அமைத்தல் (4) மதப் பிரசாரம் (5) வியாபார நிறுவனங்கள் அரசியல் அதிகாரம் செலுத்துதல். (6) நேரடியான அரசாங்கம் அமைத்தல் (7) தங்கமும் வைரமும் தோண்டி எடுத்தல் (8) போயர்ச் சண்டை (9) சுய ஆட்சிக் கிளர்ச்சியும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் (10) கானாவின் சுதந்தரமும் அதன் விளைவுகளும். கடற்பாதை கண்டுபிடிப்பு 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் துடி துடிப்பும் விறுவிறுப்பும் உடையவராக இருந்தனர். நாடுபிடிக்கும் ஆசை அவர்களிடம் மேலோங்கியிருந்தது. வளம்மிகுந்த இந்திய நாட்டைக் காண வேண்டுமென்ற எண்ணம் ஏற்றம் பெற்றது. துணிவும் கடற்படை வல்லமையும் உடைய போர்த்துக்கீசியர்கள் புது நாடுகளைக்கண்டுபிடிப்
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
