பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 D† 17.11.7). பதில் 3 சிறப்புற்று விளங்கினர். அவர்களே ஆப்பிரிக் காவில் அடியெடுத்து வைத்த முதல் ஐரோப்பிய இனத் தார் ஆவர். அவர்களைப் பின் தொடர்ந்து ஏனைய வெள்ளைக்காரர்களும் ஆப்பிரிக்காவுக்கு வருவாராயினர். . இவ்வாறு வந்த வெள்ளையர்கள் துணிகளையும் மதுவகைகளையும், துப்பாக்கிகளையும் கொடுத்து, அவற் றுக்குப்பதிலாக ஆப்பிரிக்கரிடமிருந்துயானைத் தந்தத்தை யும், பொன்னையும் அடிமைகளையும் பெற்றுக்கொண்டனர் இப்பண்டமாற்று வியாபாரம் 1652 முதல் 1800 வரை பெரிய அளவில் நடைபெற்றது. பல நூற்றாண்டுகளாக அடிமைகளை விற்பதில் தலை சிறந்திருந்த அராபிய வணி கர்களை, அத்துறையில் ஐரோப்பியர் மிஞ்சிவிட்டனர். உள் நாடு புகல் இந்த வியாபாரங்கள் செழித்தமையால், மேலும் மேலும் இப்பொருள்களைப் பெறவும் அடிமைகளைப் பிடிக்கவும் வெள்ளையர்கள் உள்நாட்டுக்குள் சென்றனர். இதற்குத் துணையாக, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவில் குடியேறலாயினர். 1801 -இல் தொடங்கிய குடியேற்றம் 1947 அளவில்தான் தடைபட்டிருக்கிறது. இப்போது ஆப்பிரிக்காவில் 50 லட்சம் வெள்ளையர் இருக்கின்றனர்; இவர்களில் 30 லட்சம் பேர் தென் ஆப்பிரிக்கா என்னும் சுதந்திர நாட்டில் வாழ்ந்து, ஒரு கோடி ஆப்பிரிக்கரை அடக்கியாண்டு வருகின்றனர். உள்நாட்டுக்குள் சென்றபோது சில இடங்களில் ஆப்பிரிக்கர் வெள்ளையரை எதிர்த்தனர். குறிப்பாக, ஜூலூ இனத்தவர் வெள்ளையர்களைக் கொலை செய்தனர். துப்பாக்கியால் சுட்டு, பிரிட்டிஷார் 1907-இல் அவர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/16&oldid=1679973" இலிருந்து மீள்விக்கப்பட்டது