பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அடியோடு ஒடுக்கினார்கள். அதன் யேற்றம் அமைதியாக நடைபெற்றது. வியாபார நிறுவனங்கள் . பின்னரே குடி ஆப்பிரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் ஆங் காங்கு வணிக நிலையங்களை நிறுவினர். இவை 17-ஆம் 18-ஆம் நூற்றாண்டுகளில் சென்னை, புதுச்சேரி, கடலூர். தரங்கம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய கடலோர நகரங் களிலும் நெல்லிக்குப்பம், இராணிப்பேட்டை போன்ற உள்நாட்டு ஊர்களிலும் வெள்ளைக்காரர்கள் ஏற்படுத்திய நிலையங்களைப் போன்றன. இவ்வாறு தமிழ் நாட்டில் வெள்ளைக்காரர் தொடங்கிய வணிக நிலையங்களுள் ஒன்றான பாரி கம்பெனி பல கோடி ரூபாய் வரவு செலவு உள்ள பெரிய தொழில் நிலையமாக இருப்பதுபோல, ஆப்பிரிக்காவில் வெள்ளையர் தொடங்கிய 50 கம்பெனி கள் ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தை ஆக்கவும் அழிக்கவும் வல்ல நிலைக்கு வளர்ந்துள்ளன. மதப்பிரசாரம் தம் முன்னோரை வழிபடுவது என்ற தத்துவம் மட்டுமே ஆப்பிரிக்கரிடம் முன்னாளில் இருந்தது. அவர் களிடம் வெள்ளைக்காரர்கள் கிறித்தவ மதத்தைப் பரப் பினர். இதன் பயனாக ஆப்பிரிக்காவில் மதம் மாறிய வர்கள் தொகை இரண்டு கோடியாகும். மதப்பிரசார கர்களில் சிலர் சீரிய தொண்டு செய்திருக்கிறார்கள் என் பதில் சிறிதும் ஐயமில்லை. வியாபார நிறுவனங்கள் அர சியல் அதிகாரம் செலுத்துதல் 1800 முதல் 1880 வரை அரசாங்க அதிகாரங்களும் வியாபார நிறுவனங்களின் மேலாளர்களாலேயே செலுத்தப்பட்டன. வேறு அரசாங்கம் இல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/17&oldid=1679974" இலிருந்து மீள்விக்கப்பட்டது