பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 நிலையில், அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. இந்தியாவிலும் 1857 வரை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும் பெனி, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனி என்பன ஆட்சி செலுத்தி வந்தன; எனவே பழம் பெருமை யில்லா ஆப்பிரிக்கப் பழங்குடிகளிடையே இவர்களது . ஆட்சி நடைபெற்றதில் வியப்பொன்றுமில்லை. நேரடியான அரசாங்கம் அமைத்தல் புதிய சிக்கல்களாலும் வணிக நிறுவனங்களுக் கிடையே ஏற்பட்ட போட்டியின் விளைவாலும் ஐரோப் பிய நாடுகள் ஆப்பிரிக்காவில் நேரடியான ஆட்சி மேற் கொள்ள வேண்டிய தாயிற்று. அத்தகைய ஆட்சி அமையு முன்னதாக, அந்தந்த நாடுகளுக்கு உரிய பகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப் பட வேண்டியதிருந்தது. அதற்காக, ஐரோப்பிய வல்லரசுகள் 1884-இல் பெர்லினில் சமரசம் செய்து கொண்டதை முன்னரே குறிப்பிட்டோம். பெர்லின் உடன்பாட்டின் விளைவாக, ஆப்பிரிக்கா பங்கிடப்பட்டது. . 1914-இல் அபிசீனியா, லைபீரியா தவிர ஆப்பிரிக்கா அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைப்பட்டிருந்தது. 1953 வரை, ஆட்சி நிலை கீழ்க் கண்டவாறு இருந்தது. (1) பிரான்சு: பிரெஞ்சுக்காரர்கள் வயப்பட்ட ஆப்பிரிக்காவின் பரப்பு 40 லட்சம் சதுரமைல்; அதாவது தமிழ்நாட்டைப் போல 80 பங்கு. பிரான்சைப்போல இருபது பங்கு. மொராக்கோ, டூனிசியா, அல்ஜீரியா, மடகாஸ்கர், பிரெஞ்சு ஈக்குவட்டோரியல் ஆப்பிரிக்கா, பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா, பிரெஞ்சு காமரூன், பிரெஞ்சு டோகோலண்டு என்பன பிரெஞ்சு ஏகாதி பத்தியத்துள் அடங்கிய ஆப்பிரிக்கப் பகுதிகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/18&oldid=1679975" இலிருந்து மீள்விக்கப்பட்டது