பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஆப்பிரிக்காவில் வேறு எந்த வல்லரசையும்விட, பிரான்சுக்குத்தான் பரப்பளவு மிகுதி. இங்கு 5 கோடிப் பேர் வாழ்கின்றனர். இவர்களில் 12 லட்சம்பேர் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரான்சிலிருந்து அல்ஜீரி யாவில் குடியேறியவர்கள். (2)பிரிட்டன்: பிரான்சுக்கு அடுத்தபடி பிரிட்ட னுக்குத்தான் ஆப்பிரிக்காவில் பெரும்பகுதி அடிமைப் பட்டிருந்தது. இப்பகுதியின் மக்கள் தொகை ஏழு கோடி; அதாவது பிரெஞ்சு ஆப்பிரிக்காவைவிடக் கூடுதல். கு பிரான்சுக்கு அந்த நாட்டைப்போல 20 பங்கு பரப்பு ஆப்பிரிக்காவில் இருந்ததுபோல, பிரிட்டனும் பிரிட்டனைப்போல 20 பங்கு பரப்பை ஆப்பிரிக்காவில் பிடித்துக்கொண்டிருந்தது. கோல்டுகோஸ்ட் (கானா), சீர்ராலியோன், நைஜீரியா, கினியா, உகண்டா, பஸுட் டோலந்து, புச்சுவானாலந்து, சுவாசிலந்து, காம்பியா தங்கனீகா, நியாசாலந்து, தெற்கு ரொடீசியா, வடக்கு ரொடீசியா, ஜான்சிபார், பிரிட்டிஷ் சோமாலிலந்து, பிரிட்டிஷ் தோகாலாந்து, பிரிட்டிஷ் கமரூன்ஸ், தென் னாப்பிரிக்கா ஆகியவை பிரிட்டிஷ் ஆப்பிரிக்காவின் பகுதி களாகும். இவற்றில் பல பகுதிகள் இப்போது உரிமை பெற்றுள்ளன. காங் (3) பெல்ஜியம்: ஆப்பிரிக்கக் கண்டத்தில் கோவையும் ரூவாண்டா உருண்டியையும் பெல்ஜியம் பிடித்துக்கொண்டது. நில அமைப்பால் காங்கோ, ஆப்பிரிக்காவின் இதயம் போன்றது. இது பரப்பளவில் பெல்ஜியத்தைப்போல நூறுபங்கு. மக்கள் தொகை ஒரு கோடியே 40 இலட்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/19&oldid=1679976" இலிருந்து மீள்விக்கப்பட்டது