பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 பெல்ஜியம் இந்த நாட்டை ஆண்ட கால முழுவதும் ஆட்சியுரிமை, ஐந்து பெரிய வணிக நிறுவனங் களிடமும் கித்தவ மதப்பிரசாரர்களிடமும் இருந்தது. (4) இத்தாலி கி. மு. 53-இலேயே இத்தாலி ஆப்பிரிக்காவின் வடகோடியிலுள்ள சில கடற்கரையூர் களைப் பிடித்துக் கொண்டிருந்தது. அணித்தே இருக்கும் அந்நாட்டுக்கு 'நாடு பிடிக்கும் ஆசை' இருப தாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. முசோலினியின் ஆட்சியில் இத்தாலி 1936-இல் எத்தியோப்பியாவும் சோமாலிலந்தையும் பிடித்துக் கொண்டது. இரண்டாவது உலகப் போரில் இத்தாலி தோல்வியடைந்ததும், 1941-இல் எத்தி யோப்பியா மீண்டும் சுதந்தரம் அடைந்தது; சோமா லிலந்து (சர்வதேச சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க) பிரிட்டிஷாரின் 'தர்மகர்த்தா ஆட்சி'க்கு உட்பட்டது. (5) ஜெர்மனி: தங்கனிகா, ரூவாண்டா உருண்டி, கமரூனில் சில பகுதிகள், டோகோலந்து, தென்மேற்கு ஆப்பிரிக்கா ஆகியவை ஜெர்மானியரிடம் இருந்தன. வை 1922-இல் முறையே பிரிட்டிஷ், பெல்ஜிய பிரெஞ்சு ஆட்சிகளுக்கு சர்வதேச சங்கத்தால் தெ. மே. ஆப்பிரிக்கா, தென் மாற்றப்பட்டன. ஆப்பிரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டது. (6) போர்த்துக்கல்: அங்கோலா, கினியாவில் ஒரு பகுதி, மொசாம்பிக்கே ஆகியவற்றைப் போர்த்துக்கல் பிடித்துக்கொண்டது. இவற்றின் பரப்பு, போர்த்துக் கலைப்போல இருபது பங்கு. இங்கு வாழும் மக்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர் ஆவர். ஆப்பிரிக்காவில்- ஆகையால் உலகில் மிகவும் பிற்பட்டபகுதிகள் இவையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/20&oldid=1679977" இலிருந்து மீள்விக்கப்பட்டது