20 பெர் (7) ஸ்பெயின்: மொராக்கோவின் ஒரு பகுதியும் சகாராவின் ஒரு பகுதியும் இப்னி, ரியோ முனி, ணான்டோ போ, கனரித்தீவு போன்ற சிறு பகுதிகளும் ஸ்பெயின் ஆட்சியில் உள்ளன. யானை போன்று பெரிய உருவமுள்ள ஆப்பிரிக்காவில் இந்தப் பகுதிகளின் பரப்பு சுண்டெலிக்குச் சமமானது. ஆனால் இவைகூடத் தமிழ் நாட்டைப்போல மூன்று பங்கு பரப்பு; மக்கள் தொகை 25 லட்சம்தான். மொராக்கோவின் மத்தியத்தரைக் கடற்கரையி லுள்ள செயூட்டா, மெலில்லா என்ற இரு சிறு பகுதிகளை ஸ்பெயின் தன் நாட்டின் நிலப்பரப்போடு சேர்ந்தவை என்று வற்புறுத்தி வருகிறது. இப்பகுதிகளின் பரப்பு 100 சதுரமைல்; அதாவது சென்னை நகரைப்போல இருமடங்கு. இவற்றில் ஒன்றரை லட்சம் மக்கள் வாழ் கின்றனர். இவ்வாறு வெளிநாடுகளைப் பங்கு போட்டுக் கொண்ட வல்லரசுகள் வெளிப்பார்வைக்கு நேசமாக இருந்தபோதிலும் அவர்களுக்குள் உட்பூசல்களும் மனக் கசப்புக்களும் நிலவின. அவையே முதல் உலகப் போர்க்கும், இரண்டாம் உலகப்போர்க்கும் வித்திட்டன. தங்கமும் வைரமும் தோண்டி எடுத்தல் . 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்கமும் வைரமும் தென் ஆப்பிரிக்கா, சீர்ராலியோன் முதலிய பகுதிகளிலும் வேறு சில பகுதிகளிலும் பெரிய அளவில் தோண்டப்பட்டன. இதனால் சில பகுதிகளில் பொருள் வளம் பெருகிற்று. ஐரோப்பியர் குடியேற்றம் மிகுதிப் பட்டது. வாணிகம் பல மடங்காயிற்று. வெள்ளைக் காரர்கள் முன்னைவிட ஆப்பிரிக்காவில் காட்டலாயினர். அக்கறை
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/21
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
