போயர்ச் சண்டை 21 டச்சுக்காரர்கள் தென் ஆப்பிரிக்காவில் பெருந் தொகையாகக் குடியேறினர். அவர்கள் வழியினர் போயர் எனப்படுவர். வைரமும் தங்கமும் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு அவர்கள் ஆங்கிலேயரை விரட்டி விட்டுத் தாங்களே தென் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி யான டிரான்ஸ்வாலை வைத்துக்கொள்ள விழைந்தனர். இதனால் வெள்ளைக்காரர்களுக்குள்ளேயே போர் ஏற் பட்டது. 1899-இல் தொடங்கிய இப்போரில் 1902-இல் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். சுயஆட்சிக் கிளர்ச்சி போயர்ச் சண்டையைத் தொடர்ந்து தென் - ஆப்பிரிக்காவில் கிளர்ச்சி நடைபெற்றது. பிறகு, அது இனக்கிளர்ச்சியாக மாறிற்று. காந்தியடிகள் அறப்போர் தொடங்கினார். அதன் பயனாக வெள்ளையர் - கறுப்பர். ஆளுவோர் - ஆளப்படுவோர் என்ற உணர்ச்சி ஆப் பிரிக்காவெங்கும் பரவியது. அந்த உணர்ச்சியை வெளிப் படுத்தும் வாய்ப்பு இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்டது. மக்களின் மனநிலையை அறிந்த பிரிட்டிஷார் மட்டும் தங்கள் ஆட்சிப்பகுதிகள் சிலவற்றில் ஓரளவு சுய ஆட்சி நல்கினர். கானாவின் சுதந்தரம் வரலாற்றுப் பெருமையும். பிரிட்டிஷ் ஆட்சியில் ஓரளவு முன்னேற்றமும் அடைந்த நாடு கானா. அந் நாட்டினர் பலர், போர்ப்படைகளில் சேர்ந்து பணியாற்றி 1945 இறுதியில் தாயகம் சேர்ந்தனர். 1947வரை
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/22
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
