பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அமைதியாகவும் அடுத்த 10 ஆண்டுகளுக்குப் புரட்சியாகவும் கிளர்ச்சி செய்து கானா மக்கள் விடுதலை வேண்டினர். 1957-இல் கானா சுதந்தரம் பெற்றது. கானாவின் சுதந்தரம் ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை வரலாற்றின் விடிவெள்ளியாகும். ஏனைய ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகவும் ஐரோப்பிய அரசுகளுக்கு எச்சரிக்கையாகவும் அது அமைந்தது. வாழும் மக்கள் ஆப்பிரிக்காவில் வாழும் மக்கள் ஆப்பிரிக்கர், ஆசியாக்காரர், வெள்ளையர் என்ற மூன்று பிரிவினர் ஆவர். ஆப்பிரிக்கர் ஆப்பிரிக்கர் என்ற சொல் ஆப்பிரிக்காவையே தாயகமாக உள்ளவர்களும் பல நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்காவிலேயே வாழ்ந்து வருபவர்களும் ஆகியவர் களைக் குறிக்கும். ஆனால் உலக வழக்கில், வட ஆப்பிரிக் காவிலுள்ள முஸ்லிம்களை - எகிப்தியர்கள், மொராக்கோ நாட்டினர் போன்ற பலரை-இச்சொல் குறிப்பதில்லை; மேற்கு ஆப்பிரிக்காவிலும் சகாராவுக்குத் தெற்கேயும் வாழும் நல்ல கறுப்பர்களையே சுட்டுகிறது. இவர்கள் தொகை 17 கோடி இருக்கலாம். இந்த ஆப்பிரிக்கர்களில் பெரும்பாலோர் நீக் ரோக்கள் ஆவர். இவர்களைத் தவிர ஹமைட்டு, பிக்மி புஷ்மென், காட்டென் டாட்ஸ், பெர்பெர், குஷிடிக் செமிட்டிக், சூடானிக், ஜுலூ என்னும் 800 தொல் மரபினங்கள் (Tribes) ஆப்பிரிக்கருள் உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/25&oldid=1679982" இலிருந்து மீள்விக்கப்பட்டது