29 ஒவ்வொரு தொல்மரபினத்துக்கும் ஒரு தலைவன் உண்டு, (Tribal Chief). அந்த இனத்தவர் அனைவரும் அத் தலைவனுக்குக் கட்டுப்பட்டவர்கள். கிளையினத் தலைவர் களுக்கு ஓரளவு அரசியல் அதிகாரமும் இருந்து வருவது ஆப்பிரிக்காவின் வாழ்க்கை முறையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும். வாட்டசாட்டமான உடற்கட்டு, ஒரளவு உயரமான தோற்றம், தடித்த உதடு, அவர்களுக்கே உரிய தலை முடித் தோற்றம், நீண்டு தொங்கும் பகுதிகளை யுடைய முகம், கறுமையான நிறம்-இவை இவர்களின் பொதுத் தன்மை. பெண்கள் பிறந்த மேனியராகவே உழுவது விதைப்பது, நாத்துப்பிடுங்குவது முதலிய வேளாண்மை வேலைகளைச் செய்து வந்தனர். மகசூல் பெருகவும் மகளிர் உடல்நலம் பெறவும் இறையருளைப் பெரும் முறையாக இவர்கள் கருதி வந்திருக்கின்றனர். விடாய்க் காலத்திலும் கருவுற்றிருக்கும் பெண்கள் வேளாண்மை வேலை செய்யக்கூடாது என்ற நியதியை இவர்கள் கடைம்பிடித்து வருகின்றனர். மனைவியரை மணப்பது இவர்களுடைய இயல்பு.எத்துணை வறுமை நிலையினரும்கூட, ஒவ்வொரு மனைவிக்கும் தனி மாத போதும் பல
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
