பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வீடு கட்டிக்கொடுப்பர். வீடென்பது மூங்கில் மரமும் கூரைகளும் உடைய சிறு குடிசையே. முன்னோர்களை வழிபடுவது இவர்கள் மரபு ஆவியுலகத்தில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. மந்திரவாதிகள் வாயிலாக ஆவியுலகுடன் தொடர்புகொள்ள இயலுமென இவர்கள் இன்றளவும் நம்புகின்றனர். மண், மரம், கல் ஆகியவற்றால் அமைந்த விக்கிரங்கங் களையும் இவர்கள் வழிபடுவர்; அவற்றுக்கு ஆடு மாடு கோழி பன்றி ஆகியவற்றைப் பலியாகக் கொடுப்பார்கள். இடி. கடல்கோள், பேய் பிசாசுகளின் தொல்லைகள் போன்ற நிகழ்ச்சிகளால் இவர்களுக்குத் தீங்கு நேரிட்ட மையால், இடிமுழக்கக் கடவுளாகக் கருதப்படும் 'சங்கு' கடல் தேவனான 'கொங்', பிசாசுகளின் காவலனான 'எலி பார்' ஆகிய விக்கிரகங்களிடம் இவர்களுக்குப் பற்றுதல் மிகுதி. ஏவல், சூனியம் ஆகியவற்றிலும் இவர்களுக்குப் பற்றுதல் இருந்து வருகிறது. இவர்களிடம் மலிந்து காணப்படும் மஞ்சள் காயல், மலேரியா,குட்டம், உடலில் சிவப்புப் புள்ளிகள் விழுந்து அதனால் புண் ஏற் பட்டுப் பரவும் தொத்துநோய் (Yaws) போன்ற நோய் கள் ஏவலால் ஏற்படுவனவே என்பர். முன்னோர்களைப் புதைத்துவைக்கும் வழக்கத்தை இவர்கள் கைக்கொள்ளு கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுடைய நிலங் களிலேயே தம் முன்னோரைப் புதைத்து விடுவர். புதைத்ததும், நிலம் புதைக்கப்பட்டவராகிய முன் னோரின் உடைமை ஆகிவிடுகிறதாம். இதனால் நிலத்தை விற்பது என்பதே ஆப்பிரிக்கர்களிடம் இல்லை. நிலத் தையும் ஆடு மாடுகளையும் சீர்தனமாக வழங்குவர். இவை தவிர, இவர்கள் அறிந்த சொத்து 'யானைத் தந்தம்.' இது எங்கேயாவது கிடைத்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/27&oldid=1679984" இலிருந்து மீள்விக்கப்பட்டது