இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32 வட நைஜீரியா, எகிப்து ஆகியநாடுகளில் முஸ்லிம்கள் சில கோடிப் பேர் இருப்பதாலும் அங்கு முஸ்லிம் ஆட்சி நடப்பதாலும் இஸ்லாமிய மதத்தைப் பரப்புவது எளி தாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவிலும் முஸ்லிம் கள் பெருந்தொகையாக உள்ளனர். இந்தோனேசியா. மலாசியா, பாகிஸ்தான், சிரியா, லெபனன், அரபுநாடுகள் ஆகியவற்றிலுள்ள முஸ்லிம்கள் விடுதலை யடைந்த தங்கள் நாட்டைப்பற்றிய செய்திகளைக் கூறி விடுதலை இயக்கத்துக்கு வித்திட்டு, இஸ்லாமிய இஸ்லாமிய மதத்தையும் பரப்பி வருகின்றனர். கல்வித் துறையில் ஆப்பிரிக்கா -குறிப்பாக ஆப்பிரிக் கக் கறுப்பர் - பின் தங்கியுள்ளனர். படித்தவர் தொகை 100க்கு 20 தான். இது 1957-இல் இருந்த நிலை. விரைந்த மாறுதல்களாகும் அரசியல் எழுச்சியாலும் படித்தவர் தொகை மிகுதியாகிவிடும். ஆனால் இதற்கு இடையூறாக இருப்பது மொழிப் பிரச்சினை.