பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஆங்கிலமும் பிரெஞ்சும் ஆட்சி மொழிகளாக ஆப் பிரிக்காவின் பெரும்பகுதியில் உள்ளன. தென் ஆப்பிரிக்கா வில் ஆங்கிலமும் ஆப்பிரிக்கான்ஸ் (17-ஆம் நூற்றாண்டு டச்சு மொழியோடு, ஆப்பிரிக்க மொழிகளின் சொற்கள் கலந்தது) என்ற மொழியும் ஆட்சி மொழிகளாக உள்ளன. கிழக்காப்பிரிக்காவில் சுவாஹிலி மொழியைப் பெரும் பாலோர் பேசுகின்றனர். எகிப்துமுதலியவட ஆப்பிரிக்க நாடுகளில் அரபு மொழியும் எத்தியோப்பியாவில் அர்மார்ஹிக் மொழியும் வழங்கி வருகின்றன. ஆப்பிரிக்கர் பண்டு, உம்புண்டு, சூடானிக் நீக்ரோ ஹமாடிக், செமடிக், கோய்சான் போன்ற பல மொழி களைப் பேசி வருகின்றனர். சூடானிக் மொழி ஏழரைக் கோடி பேராலும் பண்டு (ஸ்வாஹிலி, ஜுலு என்னும் கிளைமொழிகள் உட்பட) ஐந்து கோடிப் பேராலும் ஹௌஷா ஒரு கோடிப் பேராலும் பெர்பெர் 60 லட்சம் பேராலும் பேசப்படுகின்றன. பண்டு என்பது திராவிட மொழிகள் என்பதுபோல ஒரு மொழிகுடும்பம், ஆங்கி லத்தில் இதை 'Bantu' என்பர். இசையொலியை ஒத்த ஓசை நயத்துடன் கூடிய இம்மொழிகள். தமிழ்த் தொடர்புடையன என்றும், 'பண்டு' என்பதே தமிழ்ச் சொல் என்றும் இசையாராம்ச்சியாளரும் தமிழ்ப் பேரா சிரியருமான விபுலானந்த அடிகள் கூறியுள்ளார்கள். எழுத்து வடிவம் சில மொழிகளுக்கு மட்டும் ஏற் பட்டு வருகிறது. இலத்தீன் எழுத்து முறையும் அரபு எழுத்து முறையும் பரவி வருகின்றன. ஆப்பிரிக்க மொழிகளில் இலக்கியம் கிடையாது, நாட்டுப் பாடல் களும் பழமொழிகளும் விடுகதைகளும் உண்டு. 6 'சோம்பேறி சுருக்கமாக உண்பான்' ஆத்திரப்பட்டு எய்தால் அம்பு குறியை அடையாது' என்பன ஆப்பிரிக்கப் பழமொழிகளில் சில.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/30&oldid=1679987" இலிருந்து மீள்விக்கப்பட்டது