34 ஆசியாக்காரர் வெள்ளையர் தவிர ஏனைய வெளி நாட்டினரில் இந்தி யர்களே மிகவும் முக்கியமானவர் ஆவர். இவர்களுக்கு அடுத்தபடி, ஒரு லட்சம் பாக்கிஸ்தானியர் உள்ளனர். பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு 'இந்தியரும் பாக்கிஸ் தானியரும்' என்று குறிப்பிட 'ஆசியாக்காரர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மலாசியா லிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள் 40,000 பேரும் சீனர் சில ஆயிரம் பேரும் ஆப்பிரிக்காவில் வாழ் கின்றனர், வெள்ளையர் வெள்ளைக்காரர்கள் தென்னாப்பிரிக்காவில் 30லட்சம் பேரும் ஏனைய நாடுகளிலெல்லாம் சேர்ந்து மற்றொரு 30 லட்சம் பேரும் உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் வாழும் வெள்ளையரில் பெரும்பாலோர் ஆப்பிரிக்கானர் அல்லது போயர் எனப்படுவர்; இவர்கள் ஹாலந்து நாட்டிலிருந்து தென் ஆப்பிரிக்காவில் 250 ஆண்டுகட்கு முன் குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள். அந்த நாடே தங்களது என்ற உரிமை கொண்டாடுபவர்கள். இந்தியாவும் ஆப்பிரிக்காவும் உலகில் வேறு எந்த நாட்டையும்விட ஆப்பிரிக்கர் களுக்கு இந்தியாவுடன் உறவு மிகுதி. குறிப்பாக, தென் னிந்தியாவுக்கும் இவர்களுக்கும் 4000 ஆண்டுகட்குமுன் தொடர்பு இருந்திருக்க வேண்டுமென்று மனிதர்களின் ஆதி வரலாறு பற்றி ஆராய்வோர் கருதுகின்றனர்.
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/31
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
