35 மறைந்துவிட்ட இலமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதி யாகத் தென்னாப்பிரிக்கா இருந்திருக்கக்கூடும் என்பதும் பலருடைய உறுதியான கருத்தாகும். இது எவ்வாறிருப்பினும், இன்றைய ஆப்பிரிக்காவை 15-நூம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் காண்பதற்குக் காரணம் இந்தியாதான். இந்தியாவுக்குப் போகவேண்டு மென்ற ஆசையே அவர்களுடைய பயணத்துக்கு வித் திட்டது. இந்தியப் பெருங்கடல் தென் அட்லாண்டிக் குடன் கலக்குமிடத்திலுள்ள முனையை அடைந்ததும் இனி இந்தியாவைக்கண்டு விடுவோம்' என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது; அதனால் 'நன்னம்பிக்கைமுனை' என்று அந்த இடத்திற்குப் பெயரிட்டனர். பிரிட்டிஷார் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஆண்டபோது நேட்டாலிலுள்ள சுரங்கங்களிலும்தோட் டங்களிலும் வேலை செய்ய 1860-இலும், உகண்டாவில் இரயில் பாதைபோட 1896-இலும் கப்பல் கப்பலாக இந்தியர்களை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினர். இவ்வாறு சென்ற இந்தியர்களின் வழித்தோன்றல்கள் இன்றைய ஆப்பிரிக்காவில்-குறிப்பாக, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த பகுதிகளில் - பெருந்தொகையினராக வாழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர் தொகை ஏழு லட் சத்துக்கு மேல் இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் மூன்று லட்சம் பேர், மல்கேச (மடகாஸ்கர்) யில் இரண்டு லட் சம், கினியாவில் ஒன்றரை லட்சம் பேர், தங்கனீகாவில் 70,000 பேர், உகண்டாவில் 50,000 பேர், மொசாம்பிக் கேயில் 30,000 பேர், ரொடீசியாவிலும் நியாசாலந்தி லும் 15,000 பேர், ஜான்சிபாரில் 15,000 - இவ்வாறு இவர்கள் பரந்து கிடக்கின்றனர். பிற பகுதிகளிலும் இவர்கள் உள்ளனர். வட மேற்கு ஆப்பிரிக்கக் கடற்
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
