பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கரையிலுள்ள சின்னஞ்சிறு பகுதியான ஸ்பானிஷ் கானரி தீவில்கூட மார்வாடி வியாபாரிகள் இருப்பதை அங்கே சென்ற என் நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். இவ் வாறு சென்றிருக்கும் இந்தியருள் தமிழர், சூசராத்தியர், பஞ்சாபியர் ஆகிய மூன்று மொழியினர் முக்கியமான வர்கள் ஆவர். ஆகாகானின் சீடர்களான இஸ்மாயிலி கோஜா முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்கவர்கள். தொழிலாளர், வணிகர் தொழில் நுணுக்க வேலை களில் ஈடுபடுபவர் என ஆப்பிரிக்கா வாழ் இந்தியர் மூவகையினர். தொழிலாளர் நிலையாக ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள். வணிகர்கள் லாபத்தை இந்தியாவுக்கு அனுப்பி விடுபவர்கள். தொழில் நுணுக்க வேலைகளைச் செய்பவர்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் அங்கே தங்கியிருப்பவர்கள். தொழிலாளர் முன்னர் இந்தியாவி லிருந்து சென்றலர்களின் வழித்தோன்றல்கள்; இவர்கன் இந்தியாவில் பிறக்கவில்லை; இந்தியாவைப் பார்த்தது மில்லை; ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடையவர்கள். 1950க்குப் பிறகு தொழில் நுணுக்கத் துறையில் இந்தியாவிலிருந்து ஆப் பிரிக்க நாடுகளுக்குப் பொறியியல் அறிஞர், கல்லூரி ஆசிரியர்கள், பொருளாதார அறிஞர் ஆகியோர் சென் றுள்ளனர். ஐ. நா. அவையின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசாங்கம், நம் படை வீரர்களைக் காங்கோவுக்கு அனுப்பியிருக்கிறது. இந்தியர் நடத்தும் வங்கிகளும் இன்சூரன்சுக் கம் பெனிகளும் உணவு விடுதிகளும் ஆப்பிரிக்காவில் பலநாடு களில் நன்கு நடைபெற்று வருகின்றன. பெரிய அளவில் வாணிபம் செய்யும் இந்தியச் செல்வர்களும் ஆப்பிரிக்கா வில் உள்ளனர். சில நகரங்களில் சீக்கியர், பஸ் போக்கு வரத்தை நடத்தி வருகின்றனர். கிழக்கு ஆப்பிரிக்காவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/33&oldid=1679990" இலிருந்து மீள்விக்கப்பட்டது