பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 சின்னஞ்சிறு ஊர்களிலும் இந்தியர்களைக் காணலாம். வெற்றிலை பாக்குக் கடைகளைக் கூட இவர்கள் நடத்தி வருகின்றனர். கோவாவிலிருந்து குடியேறிய இந்தியர்கள் தையற் கடைகளையும் பஞ்சாபு சீக்கியர்கள் சைக்கிள் கடைகளை யும் நடத்துகின்றனர். சில நகரங்கள் ஆமதாபாத், பரோடா போன்று இந்திய நகரங்களாகவே ஆப்பிரிக்கா வில் காட்சி தருகின்றன. அரசாங்க அலுவலகங்களிலும் குறிப்பாக அஞ்சல் நிலையங்களிலும் இந்திய ஊழியர் தொகை பெரிது. சட்டசபைகளிலும் நகராண்மைக் கழகங்களிலும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியர் களுக்குத் தனித்தொகுதிகள் ஏற்பட்டு, இடங்கள் ஒதுக் கப்பட்டன. இவற்றால் இந்தியரிடம் ஆப்பிரிக்கர் களுக்கு நம்பிக்கை குறைந்தது. இந்தியர்களில் பலர் தாங்கள் ஆப்பிரிக்கரைவிட நாகரிகமும் அறிவும் மிக்கவர்கள் என்ற செருக்கு மனப்பான்மை படைத்திருந் தனர். ஆப்பிரிக்கரைப் பார்த்ததுமே தங்கள் மனத்தில் அருவறுப்புத் தோன்றுவதாகக் கூறி, கில சமயம் வெள்ளையருடன் சேர்ந்து கொண்டனர். இதன் விளை வாக ஆப்பிரிக்கர், ஆட்சியாளர்களுக்கெதிராகக் கலகம் செய்தபோது, அவற்றை அடக்குவதற்கு அமைக்கப் பட்ட படைகளிலும் இந்தியர் சிலர் சேர்ந்து கொண்ட னர். இதனால் மனக்கசப்பு வளர்ந்தது. 'உரலுக்கு ஓரு பக்கம் இடி;மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி' என்ற நிலையில் இந்தியர்கள் ஆட்சியாளருடைய மதிப்பைப் பெற இயலாமலும் நாட்டு மக்களுடைய நட்பை இழந்தும் அல்லற் பட்டனர். 1890-இல் நேட்டாலுக்குப்போய்ச்சேர்ந்த காந்தியடி கள் தொடங்கிய கிளர்ச்சியும் விடுதலை உணர்வும் இரண் டாம் உலகப்போருக்குப்பின் ஆப்பிரிக்கரிடம்வேரூன்றின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/34&oldid=1679991" இலிருந்து மீள்விக்கப்பட்டது