பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இந்திய நாடு 1947-ல் விடுதலை அடைந்து. ஆப்பிரிக் கரின் எழுச்சிக்கு வலிவும் பொலிவும் அளித்தது. உலகப் பெருந்தலைவர்களில் ஆப்பிரிக்க மக்களின் குரலை வெளிப் படுத்துபவர் ஜவஹர்லால் நேரு தான் என்பதை 'கெய்ரோ முதல் கேப்' வரையுள்ள மக்களும் அவர்கள் தலைவர்களும் ஐயப்பாடின்றி அறிந்து கொண்டனர். ஆப்பிரிக்காவாழ் இந்தியர்களுக்கு 1952-இல் நேரு நல்லறிவு புகட்டினார். அதன் பயனாக, ஆப்பிரிக்கா வில் தொழில் செய்யும் இந்திய வணிகர் பலர் தங்கள் தொழில்களில் ஆப்பிரிக்ரைப் பங்காளிகளாகச் சேர்த்துக் கொண்டனர். 66

  • ஆப்பிரிக்கர்களுக்கு விரோதமாக நீங்கள்

விரும்பும் எத்தகைய வேண்டுகோளுக்கும் இந் திய அரசாங்கம் செவி சாய்க்காது. நீங்கள் அவர்களுடைய நாட்டில் விருந்தினராக வாழ் கிறீர்கள். அவர்களுடன் இரண்டறக் கலந்து விடுங்கள். அது இயலாவிட்டால், இந்தியாவுக் குத் திரும்பிவிடுங்கள்" என்று 1952-இல் நேரு ஆப்பிரிக்காவாழ் இந்தியருக்குத் தெளிவாகச் சொன்னார். இச்செய்தியைப் பரப்பவும் இந்தியருக்கும் ஆப்பிரிக்கருக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்தவும் ஆப்பிரிக்காவெங்கும் தூதர் அலுவலகங் கள் தொடங்கப்பட்டன. இந்தியாவுக்கும் ஆப்பிரிக்கா வுக்குமிடையே போக்குவரத்து வசதிகளைப் பெருக்க, இந்திய அரசாங்கம் கப்பல் நிறுவனம் ஏற்படுத்திற்று. கெய்ரோவுக்கும் நைரோபிக்கும் 'ஏர் இந்தியா' விமான சேவை விரிவுபடுத்தப்பட்டது. இந்திய வானொலியில் ஆப்பிரிக்க மொழிகளிலும் ஒலி பரப்புக்கள் செய்யமுயற்சி தொடங்கப்பெற்றது ஆசிய ஆப்பிரிக்கமாநாடு பாண்டுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/35&oldid=1679992" இலிருந்து மீள்விக்கப்பட்டது