39 கில் கூட்டப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையில் ஆப் பிரிக்கரின் கட்சியை இந்தியா இடையறாது இயம்பி வந்திருக்கிறது. ஆப்பிரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயிலு வதற்கு இந்திய அரசாங்கம் வசதி செய்துகொடுத்திருக் கிறது. சில நூறு ஆப்பிரிக்கர் இந்தியப் பல்கலைக் கழ கங்களில் கல்வி கற்று வருகின்றனர். சென்னைக் கல்லூரி களிலும் சிலர் பயில்கின்றனர். டில்லிப் பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்காவைப்பற்றிய ஆராய்ச்சித்துறை (Department of African Studies ) 1954-இல் தொடங்கப்பெற்றது. ஆப்பிரிக்காவைப் பற்றி நன்கு அறிந்த இந்தியர்களும் வெளிநாட்டினரும் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆப்பிரிக்காவின் அரசியல் நிலை. வரலாறு, பண்பாடு, பூகோளம், சமுதாய நிலை ஆகியவற்றைப் பற்றி விரி வுரைகளை மாணவர்க்கு (சிலசமயம் பொது மக்களுக்கும்) நிகழ்த்துகின்றனர். இப்பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டத்துக்கு மேற்கண்ட பாடங்களில் ஒன்றைப் படிக் கும் மாணவர்கள் அப்பாடத்தில் ஆப்பிரிக்காவைப்பற்றி யும் ஒரு தேர்வு எழுதவேண்டும். ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் எவ்வ ளவோ ஆதரவு காட்டியும், இந்தியப் பொதுமக்கள் அவர்களை அன்புடன் தம் இல்லங்களுக்கு அழைப்பது அரிதாக இருக்கிறது. இதனால், இந்தியாவிலிருந்து தாய கம் செல்லும்போது இவர்கள் நல்லெண்ணத்துடன் செல்லுவதில்லை. இந்த நிலைக்கு ஒரு முடிவு காணவும் விடுமுறை நாட்களில் இந்த மாணவர்கள் இந்தியாவைச்
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
