பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சுற்றிப்பார்க்கவும் இந்திய நண்பர்களை உண்டாக்கிக் கொள்ளவும் இந்திய அரசாங்கத்துக் கல்வி- கலைத்துறை அமைச்சரவைகள் ஆவன செய்து வருகின்றன. பொருளாதார நிலை இனி ஆப்பிரிக்காவின் பொருளாதார நிலையைச் சற்று கூறுவோம். ளேளாண்மை ஆப்பிரிக்காவின் பழமையான தொழில் வேளாண்மை. மிகப் பெரும்பாலான மக்கள் இதனா லேயே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால் நிலத் தில் 10-இல் ஒரு பங்குதான் வேளாண்மைக்கு ஏற்றதாக இருக்கிறது. அவற்றுள் வளமான நிலங்களை வெள்ளை யர்கள் எடுத்துக்கொண்டுவிட்டனர். நிலப் பிரச்சினை ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய பிரச் சினையாக இருக்கிறது. ஆப்பிரிக்கரிடையே கம்யூனிசத் தைப் பரப்பி வருவதும் வெள்ளையர் - கறுப்பர் இனப் போராட்டத்துக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதும் நில உடைமைத் தகராறுதான். மதப் பிரசாரகர்களால் கிறித்தவம் பரப்பப்பட்டிருப்பது பற்றி, புரட்சிக் காரர்கள் ஆப்பிரிக்கரிடம் செய்துவரும் பிரசாரம் பின் வருமாறு: "வெள்ளைக்காரர்கள் இங்கு வந்தபோது நிலம் உங்களிடம் இருந்தது. விவிலிய நூல் அவர்களிடம் இருந்தது. இப்போது விவிலிய நூல் உங்களிடம் உளது; நிலம் அவர்களிடம் இருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/37&oldid=1679994" இலிருந்து மீள்விக்கப்பட்டது