பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தொழில் தொடக்க தொழில் வளர்ச்சி ஆப்பிரிக்காவில் நிலையிலேயே இருக்கிறது. சுரங்கத் தொழிலும்தோட்டத் தொழிலும் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக நடைபெற்ற போதிலும். வெளிநாட்டார் சுரண்டலுக்குத்தான் இவை துணையாக இருந்துள்ளன. இத்தொழில்களில் வெள்ளையர் பெறும் சம்பளமும் கறுப்பர் பெறும் சம்பளமும் 20-க்கு 1 என்ற ஈவில் இருக்கின்றன. உலகிலேயே குறைந்த கூலி பெறுபவர் ஆப்பிரிக்கரே. பெருந்தொழில்களுக்கு இன்றியமையாதனவாகிய புவியியல் பொருள்கள் ஆப்பிரிக்காவில் கிடைத்துங்கூட அவற்றைப் பயன்படுத்தக்கூடிய தொழில்கள் இங்கே இயங்கவில்லை. ஆகையால், பல்லாயிரம் கோடி மூலதனம் போட்டுப் புதிய தொழில்கள் ஏற்பட ஆப்பிரிக்காவில் வாய்ப்பு இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த பகுதிகளில் ஓரளவு தொழில் வளர்ச்சி இருந்தது. ரொடீசியாவிலும் உகண்டாவிலும் இரயில் பாதைகள் போடப்பட்டன. நடு ஆப்பிரிக்காவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. ஜம்பேசி ஆற்றின்மீது மிகப் பெரிய (உலகிலேயே மூன்றாவது நீளமான) பாலம் போடப்பட்டது. மொம்ப சாவிலும் (கானாவிலுள்ள) டகொரடாவிலும் துறை முகங்கள் உண்டாக்கப்பட்டன. அஸ்வானிலும் சென்னாரி லும் அணைகள் கட்டி முடிக்கப்பட்டன. வைரச் சுரங்கங் களும் தங்கச் சுரங்கங்களும் வெட்டப்பட்டன. பிரெஞ்சு ஆட்சியிலிருந்த பகுதிகளில் இந்த அளவு முன்னேற்றம் இல்லாவிடிலும் அழகான நகரங்கள் உருவாக்கப்பட்டன. சீரிய சாலைகள் உண்டாக்கப்பட்டன. பாசனத் திட் டங்கள் நிறைவேற்றப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/39&oldid=1679996" இலிருந்து மீள்விக்கப்பட்டது