V6 N64 முன்னுரை கொச்சித் துறைமுகத்தில் கப்பலேறி மேற்கு நோக்கி நேரே சென்றால் எட்டு நாட்களில் ஆப்பிரிக்காவின் கரையை அடையலாம். ஆப்பிரிக்காவின் பரப்பு உலகப்பரப்பில் நான்கில் ஒன்று. உலக மக்களில் 10-இல் ஒரு பங்கினர் ஆப்பிரிக் காவில் வாழ்கின்றனர். தொழில் வளர்ச்சிக்கு இன்றி யமையாத மூலப் பொருள்கள் ஆப்பிரிக்காவில் அளவு கடந்து காணப்படுகின்றன. ஐரோப்பியர்கள் இவற் றைப் பயன்படுத்திக் கொண்டும் தங்களுடைய ஆதிக் கத்தை அப்பாவிகளான ஆப்பிரிக்கர்மீது நிலைநாட்டிக் கொண்டும் வந்தனர். 60 லட்சம் வெள்ளையருக்கு 25 கோடி கறுப்பர்கள் அடிமைப்பட்டிருந்தனர், கட்டுண் டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்' என்று விதியை நொந்தனர். இந்தியாவின் தந்தையான மகாத்மா காந்தியடிகள் ஆப்பிரிக்காவில் தொடங்கிய கிளர்ச்சியின் விளைவாகச் சுதந்திர வேட்கை பெருக்கெடுத்து வரவர வலுப்பெற்றி ருக்கிறது. ஆப்பிரிக்கா அனைத்தும் அரசியல் இருள் அகன்றுவருகிறது. கதந்திர சூரியன் ஒளிவீசத் தொடங்கி
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/4
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
