பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 தென் ஆப்பிரிக்கா மிக வளர்ச்சியடைந்த பகுதி யாகவும் போர்த்துக்கல் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் மிகமிகப் பிற்போக்கானவையாகவும் இருக்கின்றன. இந்தகைய ஏற்றத் தாழ்வுகளைப் போக்கவும் வருங்கால வளத்துக்குத் திட்டமிட்டுத் தொழில்கள் தொடங்கவும் ஆப்பிரிக்காவுக்கு ஒரு பொருளாதாரக் குழுவை நியமிக்க ஐக்கிய நாடுகள் முடிவு செய்திருக்கிறது. . இனப் பிரச்சினை இயேசு வெள்ளைத் தோல் உள்ளவர்களே மேலானவர்கள்; கறுப்பர்கள் அவர்களுக்கு மட்டமானவர்கள். ஆகையால் ஆட்சி நடத்தவும் அதிகாரம் செலுத்தவும் ஆடம்பர வாழ்வு வாழவும் வெள்ளை நிறத்தவர்க்கு மட்டுமே உரிமை உண்டு; அவர்கள் ஆணைப்படி அவர்களுக்காக உழைப்பதற்காவே ஏனையோர் அனைவரும் கிறிஸ்துவால் படைக்கப்பட்டிருக்கின்றனர்' கருத்தை வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவில் கொண் டுள்ளனர். இதனால் வெளியே இருந்துவந்த வெள்ளை யர்கள் ஆப்பிரிக்க மண்ணிலேயே பிறந்து வளர்ந்த மக்களை விலங்குகளுக்கும் கீழாகக் கருதி அவர்களை அளவுகடந்த கொடுமைக்கு உள்ளாக்கி வருகிறார்கள். என்ற சிறப்பாக, தென் ஆப்பிரிக்காவில் இனவெறி தலைவிரித்தாடுகிறது. அங்கு வெள்ளையாக்கும் கறுப்பர்க் கும் வாழும் இடங்கள் இன அடிப்படையில் ஒதுக்கப் பட்டுள்ளன. வெள்ளைக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உள்நாட்டினர் சேர்த்துக்கொள்ளப்படுவ தில்லை. பஸ்ஸிலும் இரயிலிலும்கூட அவர்களுடன் கறுப்பர்கள் செல்ல முடியாது. . 'ஆப்பர்த்தீடு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/40&oldid=1679997" இலிருந்து மீள்விக்கப்பட்டது