பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 என்று சொல்லப்படும் இந்த ஒதுக்கல் சட்டங்கள் சொல்லொணாத் துயரை ஆப்பிரிக்கர்களுக்கு இழைத் துள்ளன. இந்தச் சட்டங்களை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு இன ஒதுக்கல் சட்டத்தை தென் ஆப்பிரிக்க அரசு நிலைநாட்டி வருகின்றபோதிலும், ஆப்பிரிக்க மக்களின் உள்ளக் குமுறல் சற்றும் குறையவில்லை. உல் கெங்குமுள்ள மக்கள் அவர்கள்பால் இரக்கம் காட்டி வருகின்றனர். அவர்களுடைய தலைவரான லித்துலிக்கு, 1961-இல் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கிறது. தீன்யாவில் வெள்ளையரின் நிறவெறியை ஒழித்துக் கட்ட மாவ்மாவ் கலகங்கள் நடைபெற்றன. இக்கலகக் காரர்கள் 'புரட்சிகரமானவர்கள் ஆபத்தானவர்கள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கருதப்பட்டு 6 வருபவர்கள். இவர்களுடைய தலைவரும் தேசியவாதியு மான ஜோமோ கென்யாட்டா. இரண்டு லட்சம் உறுப் பினர்களுள்ள தீனியா ஆப்பிரிக்க யூனியன் என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். அல்ஜீரியாவில் 12 லட்சம் பிரெஞ்சுக்காரர்கள் குடி யேறி அந்நாட்டின் ஆதிமக்களின் உரிமைகளுக்குத் தடை யாக உள்ளனர். போர்த்துக்கீசியப் பகுதிகளிலும் நிறவெறி நிலவு கிறது. அன்றாட வாழ்க்கையில் ஆப்ரிக்கரைத் தனித்து வைத்து அவமதித்தபோதிலும் கீழ்த்தரமான வேலைகள் செய்யவும் ஆபத்துக் காலத்தில் போர்ப்படைகளில் சேர்த்து அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு மாற்றாருக் குப்பலி கொடுக்கவும் வெள்ளைக்காரர்கள் தயங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/41&oldid=1679998" இலிருந்து மீள்விக்கப்பட்டது