45 உரிமை பெற்ற ஆப்பிரிக்க நாடுகளில் உலக மக்கள் அனைவரும் ஒருகுலம். மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு கிடையாது. எல்லோரும் சமம்' என்ற தத்துவம் கடைப்பிடிக்கப்படுகிறது. அங்கு வாழும் வெள்ளையர் தொகையும் குறைந்து வருகிறது. அரசியல் நிலை பல தலைமுறைகளாக அரசியல் துறையில் சிறந்து விளங்கிய சிறப்பு ஆப்பிரிக்க நாடுகளில் எகிப்து, கானா, எத்தியோப்பியா மூன்றுக்குமே உண்டு. எத்தியோப்பியா கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே சுதந்தரமாக இருந்த நாடு. கானா ஐந்தாம் நூற்றாண்டிலேயே கவர்னர்கள் 16 பேரை நியமித்து அவர்கள் ஒவ்வொருவருக்குக் கீழும் சில மாநிலங்களின் ஆட்சியை ஒப்புவித்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கீழும் மாவட்டங்கள் ஏற்படுத்தியும் செம்மையான ஆட்சி நடத்தி வந்திருக்கிறது. இத் தகைய நாடுகள்கூட 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தங்களுடைய உரிமைகளை இழந்திருந்தன. லைபீரியா என்ற சின்னஞ்சிறு நாடு மட்டும் அமெரிக் காவிலிருந்து விடுதலை லேட்கையுடன் வந்து சேர்ந்தவர் களின் ஆர்வத்தால் 1847 முதல் சுதந்தர நாடாக இருந்து வந்துள்ளது. முதல் உலகப்போருக்குப் பிறகு, எகிப்தும் இரண்டாவது உலகப் போருக்கு பிறகு லிபியாவும் எத்தியோப்பியாவும் இழந்த சுதந்தரத்தை மீண்டும் பெற்றன. தென் ஆப்பிரிக்கா ஏற்கெனவே சுதந்திரம் பெற்ற போதிலும் ஆப்பிரிக்கருக்கு அங்கு ஓர் உரிமையும் இல்லை.
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
