பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஆப்பிரிக்காவின் எஞ்சிய நாடுகள் எல்லாம் ஐரோப் பியர்களின் ஆட்சியிலேயே, இரண்டாம் உலகப்போரும் முடிந்த பிறகும்கூட, இருந்தன. டிரஸ்டிஷிப், காமன் வெல்த் நாடு, கம்யூனிட்டியைச் சேர்ந்த பகுதி, மாண்டேட்டட் டெரிடேரி, காலனிப் பகுதி, இருநாடு களின் கூட்டு ஆட்சியில் உள்ள பகுதி, புரட்டக்டரேட் என்ற பல பெயர்கள் உள்ள ஆட்சி முறைகள் நிலவின. அரசியல் காட்சிக் கூடமாக ஆப்பிரிக்கா இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த பகுதிகளில், பிற பகுதி களை நோக்க, மக்கள் ஆட்சி முறை மேற்கொள்ளப் பட்டது. அங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஒரே வகையான கொள்கை கடைப்படிக்கப்படவில்லை. ஆப்பிரிக்கத் தொல் மரபினங்களின் தலைவர்கள் வாயிலாக ஆட்சி நடத்தும் முறையைப் பிரிட்டிஷார் கையாண்டனர். பிரெஞ்சு ஆட்சி நிலவிய பகுதிகள் சிலவற்றில் அங்குள்ள மக்களுக்குப் பிரெஞ்சு குடிமக்கள்' என்று சட்டத்தின் வாயிலாக உரிமை வழங்கப்பட்டது. பிரான்சிலுள்ள பாராளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதி நிதித்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் இச்செயல் களால் வெள்ளையரல்லாதார் சிறு பயனும் பெறவில்லை. அவர்களுடைய வறுமை அணு அளவும் அகலவில்லை. பெல்ஜியர் ஆட்சி நிலவிய பகுதிகளில் அதிகார மில்லாத சட்டசபைகளே இருந்து வந்தன. போர்த் துக்கல் ஆட்சியிலுள்ள பகுதிகளில் அந்த அளவுகூட அரசியல் சீர்திருத்தம் செய்யப்படவில்லை. 1947-இல் இந்தியா சுதந்தரம் பெற்றதும் பாண் டூங்கில் நடைபெற்ற ஆசிய - ஆப்பிரிக்க ஆசிய-ஆப்பிரிக்க மாநாடும் 1950-இல் எகிப்தில் மன்னர் பரூக் பதவியிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/43&oldid=1680000" இலிருந்து மீள்விக்கப்பட்டது