பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 N64 நீக்கப்பட்ட நிகழ்ச்சியும், 1956-இல் சூயஸ்கால்வாயின் உடைமையை எகிப்து தேசியமயமாக்கிய வீரச்செயலும் ஆப்பிரிக்கர் உள்ளங்களை ஊடுருவின. அதனால் அவர்க ளிடம் தோன்றிய எழுச்சியின் மாண்பும் விடுதலை உணர்வின் உறுதியும் உலகுக்கு வெளிப்பட்டன. விரும் பியோ விரும்பாமலோ மேன்மேலும் ஆப்பிரிக்கர்க்கு உரிமைகள் வழங்க வெள்ளைக்கார அரசாங்கங்கள் திட்டம் தீட்டின. 1965 தொடக்கத்தில் ஆப்பிரிக் காவில் முக்கால்' பகுதி சுதந்தர நாடுகளாக உள்ளன. எஞ்சிய நாடுகளும் சுதந்தரத்தை அடையும் பாதையிலுள்ள ஒரு சில இடையூறுகளைத் தாண்டி யுள்ளன. அல்ஜீரியாவிலும் அங்கோலாவிலும் தென் மேற்கு ஆப்பிரிக்காவிலும் பிற்போக்கு கூட்டத்தினரின் ஆட்சி மக்களை மயக்கியும் மிரட்டியும் வருகிறது. வெள்ளையர் ஆட்சியின்போது எந்தவிதமான அடிப் படையும் இல்லாமல் சில பகுதிகளைச் சில நாடுகள் பிடித்துக்கொண்டன. மொராக்கோவில் ஒரு பகுதியை ஸ்பெயினும் மற்றொரு பகுதியைப் பிரான்சும் ஆண்டன. சகாராவிலும் இவ்வாறே. சோமாலிலந்தில் ஒரு பகுதியை பிரிட்டனும் மற்றொரு பகுதியை இத்தாலியும் ஆண்டன. காங்கோவில் பெரும்பகுதியில் பெல்ஜியமும் சிறுபகுதியில் பிரான்சும் ஆட்சி செலுத்தின.அடிமைநாடு களாகத் தனித்தனி ஆட்சிகளில் இருந்தபகுதிகளை உரிமை பெற்ற பிறகு ஒன்று சேர்த்து ஒரே கட்டுக்கோப்பின் கீழ் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள. செம்மை யான அரசியல் கட்சிகள் அருமையர்க உள்ளன; இந்தி யாவில் 600 க்கு மேற்பட்ட சிற்றரசுகளைச் சர்தார் வல்லபாய் பட்டேல் இணைத்தது போன்ற செயலை ஆப்பிரிக்காவில் செய்ய வேண்டியிருக்கிறது. 570

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/44&oldid=1680001" இலிருந்து மீள்விக்கப்பட்டது