பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்பிரிக்காவின் முக்கியத்துவம் ஏராளமான நாடுகள் ஆப்பிரிக்காவில் சுதந்தரம் பெற்றுள்ளன; ஐக்கிய நாடுகள் அவையில் இவற்றுக்கு எண்ணிக்கை வலு இருந்து வருகிறது. இந்த வாக்கு களைப் பெறுவதற்காக உலக வல்லரசுகள் ஆப்பிரிக் ஆதரவைப் பெற விழைகின்றன. ரஷ்யரும் காவின் சீனரும் பரப்பப் ஆப்பிரிக்காவில் பெரு தங்கள் முயற்சி செய்து தத்துவங்களைப் வருகின்றனர்; ஆப்பிரிக்க மாணவர்க்காக ரஷ்யாவில் தனிப் பல்கலைக் கழகம் ஏற்பட்டிருக்கிறது. . அமெரிக்கரும் ஆப்பிரிக்காவில் அக்கறை காட்டி வருகின்றனர். லிப்யா, லைபீரியா முதலிய நாடுகளில் கடற்படை, விமானப்படைத் தளங்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. போர்க்காலத்துக்கு உரிய தொழிற் சாலைகள் நடத்துவதற்கு மறைவான இடங்கள் ஆப்பிரிக் காவில் உள்ளன. சூயஸ் கால்வாய் மூடப்படும்போது ஆசியாவுடன் போக்குவரத்துக்கு ஆப்பிரிக்காவைச் சுற்றி தான் அமெரிக்கக் கப்பல்கள் செல்லவேண்டும். அமெரிக் கரின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யவும்' உபரி மூலதனத்தை முதலீடு செய்யவும், தொழிற்சாலை களுக்கு வேண்டும் மூலப்பொருள்களைப் பெறவும் அவர் களுக்கு ஆப்பிரிக்காவின் ஆதரவு இன்றிமையாதது. ஆப்பிரிக்க இனத்தவராகிய நீக்ரோக்கள் அமெரிக்கா வில் இருப்பதால் இந்த இனத்துத் தலைவர்களாக உள்ள அரசியல் அலுவலர்கள் கலைஞர்கள் ஆகியோரை ஆப்பிரிக்காவுக்கு அடிக்கடி அனுப்பி அமெரிக்கர் ஆட் பிரிக்கருடன் நல்லுறவை வளர்க்கப் பாடுபடுகின்றனர் லைபீரியா என்னும் சுதந்தர ஆப்பிரிக்க நாடு, ஆப்பிரிக் காவில் ஒரு சிறிய அமெரிக்காவாக விளங்கி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/45&oldid=1680002" இலிருந்து மீள்விக்கப்பட்டது