4 யுள்ளது. வெள்ளையரோடு கறுப்பரும் சமத்துவநிலை அடைந்து வருகின்றனர். பொருளாதாரத்துறையிலும் பொலிவுபெற முதல் அடிஎடுத்து வைக்கின்றனர். வளமான வருங்காலம் அவர்களை எதிர்நோக்குகிறது. . 21-ஆம் நூற்றாண்டு ஆப்பிரிக்காவின் பொற் காலமாக இருக்குமென்பது உறுதி. அவ்வாறுதான் அறிஞர் அனைவரும் கருதுகின்றனர். அதற்குரிய அறி குறிகளை இப்போது பார்க்கிறோம். உலக அரங்குகளில் ஆப்பிரிக்க நாடுகளின் குரல் ஒலிப்பதைக் கேட்கிறோம். இந்த நாடுகளைப் பற்றிய அடிப்படைச் செய்திகளையும் வரலாற்றுப் பின்னணியையும் சுருங்கக் கூறுவதே இந் நூல் வரிசையின் குறிக்கோள். இந்த முதல் நூலில் ஆப்பிரிக்காவைப் பற்றிய பொதுவான செய்திகளையும், ஆப்பிரிக்க நாடுகள் இன்ன இன்ன என்பதையும், இவற்றின் முக்கியத்துவத்தையும், இந்தியாவுக்கும் இந்நாடுகளுக்கும் உள்ள உறவுகளையும். 1964 தொடக்கத்தில் நிலவும் அரசியல் நிலையையும் குறிப்பிடுவோம்.
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/5
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
