பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலப்பரப்பு ஆறு கண்டங்களில், ஆசியாவுக்கு அடுத்தபடியாகப் பெரிய பரப்பளவை உடையது ஆப்பிரிக்கா. இதன் பரப்பு ஒரு கோடியே 12 லட்சத்து 62,000 சதுரமைல், அதாவது இந்தியாவைப்போல ஒன்பது பங்கு; அமெரிக் காவைப்போல நான்கு பங்கு. இப்பரப்புத் தவிர, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த (மல்கசே எனப்படும் மடகாஸ்கர், ரியூனியன், கானரித் தீவு முதலிய) தீவுகளும் உள்ளன. இவற்றின் பரப்பளவு 2,39,000 சதுரமைல், அதாவது தமிழ்நாட்டைப்போல 41 பங்கு. ஆப்பிரிக்கா கண்டமே ஒரு தீவு என்றும் சொல்ல லாம். இந்தியப் பெருங் கடல், அட்லாண்டிக் பெருங் கடல், மத்திய தரைக்கடல், செங்கடல் ஆகியவை சூழ்ந் திருப்பதால் இது ஒரு தீவுதான். இந்த நிலை 1869-இல் ஏற்பட்டது. 100 மைல் (161 கி. மீ.) தொலைவுக்குச் சூயஸ்கால்வாய் மனித முயற்சியால் வெட்டப்பட்டு மத்திய தரைக்கடலும் செங்கடலும் இணைக்கப்பட்டன. அதற்குமுன், ஆப்பிரிக்கா ஆசியாவுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. சூயஸ்கால்வாய் வெட்டப்பட்ட பிறகு, ஆப்பிரிக் காப் படத்தைச் சற்று சாய்த்து வைத்துப் பார்த்தால், ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவைப் போலவே தோற்றம் தருவது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்காவின் நீளம் வடக்கேயிருந்து தெற்கே 5,000 மைல். அகலம், கிழக்கேயிருந்து ஆ.12 மேற்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/6&oldid=1679963" இலிருந்து மீள்விக்கப்பட்டது