6 (லைபீரியா முதல் சோமாலி குடியரசு வரை) 4,600 மைல். ஆப்பிரிக்காவின் அகலம் இந்தியாவின் நீளத் தைப்போல இரண்டு பங்கு இருக்கிறது! மக்கள் தொகை ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் மிகமிகப் பின் தங்கி யவை. மக்கள் தொகை பற்றிச் செம்மையான புள்ளி விவரங்கள் இல்லை. ஆப்பிரிக்காவில் மொத்தம் 25 கோடி மக்கள் வாழ்வதாகக் 'குத்து மதிப்பாக' 1961-இல் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளுள் மக்கள் மிகுதியாக உள்ளது நைஜீரியா (34 கோடி). ஆப்பிரிக்க நகரங்களுள் பெரியது கெய்ரோ; சென்னை மாநகரம் அளவு பெரிய நகரம் ஆப்பிரிக்காவில் வேறு ஒன்றுகூட இல்லை. ஆப் பிரிக்காவின் பிற நகரங்களுள் முக்கியமானவை ஜோகானஸ்பர்க், டர்பன், நைரோபி, அலெக்சாண்ட் ரியா, அக்ரா, கேப்டவுன், ஆடிஸ் அபாபா, லியோ போல்டுவில்லி, பிரிட்டோரியா. மலைகள் இயற்கையமைப்பு - வட ஆப்பிரிக்கக் கடற்கரையருகே மொராக்கோ, அல்ஜீரியா, டூனிஸ் ஆகியவற்றில் ஆங்காங்கு மலைப் பகுதிகள் உள்ளன. உயர்ந்த மலைகள் கிழக்காப்பிரிக் காவில் தங்கனீகாவில் உள்ளன. இவற்றுள் ஒன்றான கிலிமன்ஜாரோ மலையின் உயரம் 19 565 (எவரெஸ்டு
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/7
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
