பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29,028 அடி, நீலகிரி 7,000 அடி) அடி. ஆப்பிரிக்காவி லேயே மிகவும் தாழ்ந்தபகுதி எகிப்திலுள்ள குவாட்டா ராப் பள்ளம்; இது கடல் மட்டத்திற்கு 440 அடி கீழே இருக்கிறது. ஆறுகள் நீர்வளம் நிரம்பியது ஆப்பிரிக்கா. நைல், காங்கோ நைஜர், ஜம்பேசி, ஆரஞ்சு, செனிகல், வோல்ட்டா என்னும் பேராறுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் குறைந்தது 1,000 மைலுக்கு ஓடுகின்றன. தமிழ் நாட்டின் பெரிய ஆறு காவிரி; குடகில் தோன்றுமிடத்தி லிருந்து காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் கலக்கும்வரை. அதனுடைய ஓட்டம் 480 மைல்தான். 2,900 மைல் பாயும் காங்கோவும் 4,160 மைலுக்குச் செல்லும் நைலும் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன; எனவே அவை கங்கையிலும் (1,540 மைல்) பெரியவை. தொழில் வளர்ச்சியின்மை காரணமாக அயலவர் ஆட்சியில் அல்ல லுற்ற ஆப்பிரிக்கா ஆற்றுநீரை ஆக்க வேலைக்குப் பயன் படுத்தவில்லை. மின்சாரத் திட்டங்களை உருவாக்கும் முயற்சி 1960 - இலிருந்து சில சுதந்தர நாடுகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பெரிய ஏரிகள் பலவும் ஆப்பிரிக்காவில் காணப் படுகின்றன. குறிப்பிடத்தக்கவை விக்டோரியா, - தங்கனீகா, நியாசா, ரூடோல்ப், பங்க்வெய்யுலா, ஆல் பாட். விக்டோரியா ஏரியின் பரப்பு தமிழ் நாட்டில் பாதி (26,828 சதுரமைல்); ஆல்பர்ட் ஏரியின் பரப்பு கன்னியாகுமரி மாவட்டத்தைப்போல முக்கால் பங்கு (1,640 சதுரமைல்). இரண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/8&oldid=1679965" இலிருந்து மீள்விக்கப்பட்டது