பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


வீங்கிக்கொண்டுமே இருந்தால், ஆரியவினம் இப்படியே நம் உள்ளுயிரை வாங்கிக் கொண்டும், ஓங்கிக்கொண்டுமே இருக்குமென்பதில் துளியும் ஐயம் இல்லை.

இவ்வுண்மைகளின் அடிப்படையில் எழுந்த சலசலப்புகள் தாம் அண்மையில் தமிழக அரசின்மேல் ஆரியர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள்.

இக்கால் தமிழக அதிகாரத்தையும் ஆட்சியையும் அரசியல் அமைப்புப்படி கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நாம் கூறிவந்த, வருகின்ற சில உயர்நிலை அரசியல் அமைப்பின்படி நடக்க முற்படவில்லையாயினும், இதன் முன்னிருந்த பேராயக் கட்சியின் அரசியல் ஆட்சிமுறைக்கு எவ்வகையிலும் தாழ்ந்து போய்விட்வில்லை என்பது நாம் இவ்வீராண்டுக் காலமாகப் பொறுத்திருந்து கண்ட ஓர் உண்மையாகும். இவ்வீராண்டுக் காலத்தில் இது செய்த அரசியல் திறம்பாடுகளோ, பொருளியல் முன்னேற்ற அடிப்படைகளோ பெரும்பாலும் நம் தமிழ்நாட்டிற்குத் தேவையான அளவில் இல்லை என்றாலும், இது செய்திருக்கின்ற குமுகாயப் புரட்சிக்கு நாம் இதனைப் பாராட்டியே ஆதல் வேண்டும். சென்னைப் பகுதிகளின் பெயர்களைத் தூய தமிழ் வடிவங்களாக மாற்றியது. ‘மதராஜ் என்ற தெலுங்குச் சொல்லினின்று திரிந்து வழங்கிய ‘மெட்ராஸ்’(Madras) என்ற ஆங்கிலச் சொற்பெயர் இத்தமிழ்நாட்டுக் குரிய பெயராக வழக்கிலும் சட்டத்திலும் ஆளப்பட்டு வந்ததை அடியோடு தகர்த்துத் ‘தமிழ்நாடு’ என்ற உரிமை வழக்குப் பெயரைச் சூட்டியது, ஆரியப் புரோகிதன் வேள்வி நடத்திய திருமணங்களே செல்லும் என்ற மனுநெறிவழி இந்தியச் சட்ட அமைப்பை அசைத்து, தமிழ் நெறி முறையில் நடைபெறும் திருத்தத் திருமணங்களும் செல்லும் என்று சட்டமாக்கியது, சாதிகுல முறையொழிப்பின் முதல் முனைப்பாகக் கலப்புத் திருமணங்களை ஊக்கியது, அரசினர் அலுவலகங்களில் எங்கும் தமிழ்மணங் கமழச்செய்தது. அலுவலக அதிகாரங்களில் பார்ப்பனராயிருந்தவர்களின் கொட்டம் ஒடுங்குமாறு அவர்களை மாற்றியும் இறக்கியும் நீக்கியும், அவ்விடங்களில் தமிழர் நலம் நாடும் அதிகாரிகளை அமர்த்தியும் தமிழர் நலம் பேணியது, உலகத் தமிழ் மாநாடு நடத்தி உலகிற்குத் தமிழின் ஏற்றம் உரைத்தது, உணவுப் பொருள் முடக்கும் குமுகாய முதலைகளின் வாயடக்க வயிறு கிழித்து உள்ளொளித்த பன்னூறாயிரம் மூட்டைகளை வெளிக்குக் கொணர்ந்தது. இந்தி யெதிர்ப்புக் கொள்கையை விடாப்பிடியாகத் தலைமேற் கொணர்ந்த தில்லியரசின் கழுத்துநரம்பு தெறித்து விழுமாறு தடுத்து நிறுத்தித் தமிழர்தம் தன்மானம் தலைநிறுத்தியது, மாணவர் பயிற்சிப்படையில் பத்தே பத்து கட்டளைச் சொற்களாயினும் அவை இந்தியில் இருந்தால் அந்தப் படையே தேவையில்லை என்று அற்றைப் பாண்டியனின் நெற்றுக்குரல் ஒலித்து