பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

109


வில்லை என்பதற்கு என்ன உறுதி கூறிவிட்டுப் போயிருக்கின்றாள்? அல்லது இவர் குறிப்பிடும் தீண்டத்தகாதவர்கள் எல்லாரும் மநு எழுதிவைத்த வகைப்படி பிறந்தவர்கள்தாம் என்பதைக் கண்டுபிடிக்கப் பூரியார் என்ன அளவுகோல் வைத்திருக்கின்றார்? இவருக்கு இத்தகைய வேலையைக் கொடுத்த அதிகாரி யார்? ஒருவனைத் தீண்டத்தகாதவன் என்று கூறப் பூரிப் பிராமணனுக்கு எவர் அதிகாரம் கொடுத்தவர்? இந்த ஆளின் மேல் பிழையில்லை. இப்படிப்பட்ட ஒருவரை, சாதி வெறியரை இன்னும் நார் நாராகக் கிழித்தெறியாமல் வைத்திருக்கின்றார்களே அவர்களின் மேல்தான் பிழை ! “தீண்டாமையைக் கடைப்பிடிப்பேன்” என்று கூறிய இவர் வாயில் மநுவின் முறைப்படி, ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாலும் குற்றமில்லை. தென்னகத்து மண்ணில் இவர் கால் வைப்பாரானால் ஒருகால் அது நிறைவேறலாம்.

பிராமணீயம் என்றைக்கும் சாகாத ஒரு நச்சுக் கொடி. அது வேருடன் கல்லி யெறியப்பட்டாலொழிய இந்நாட்டிலுள்ள மக்கள் முன்னேறப் போவதில்லை. காந்தியாரின் பெயரைக் கூறிக்கொண்டும் கைந்நூல் நூற்றுக்கொண்டும் இராம வழிபாடுசெய்து பிழைக்கும் அநுமன்கள் இந்நாட்டில் உள்ளவரை பிராமணியம் இருந்துகொண்டு தான் இருக்கும். பேராயக் கட்சியே பிராமணியத்திற்குத் தீனி போடுவது. இராசாசியின் உரிமைக் கட்சியே பிராமண உரிமையைக் கட்டிக் காப்பது. இக் கட்சிகளில் உள்ளவர்களின் துணிவாலேயே வடநாட்டுப் பூரியாரும், தென்னாட்டு வாரியாரும் தம்தம் வினைப்பாடுகளை மிகத் துணிவாகவும், மிக விரிவாகவும் செய்து வருகின்றனர். மற்றப்படி அறிவியலும் மாந்தவுரிமையும் மிகவும் உயர்ந்து விளங்கும் இக்காலத்தில் இவர்கள் இந்த வகை வெறிக் கூத்தும் பேயாட்டமும் ஆடியிரார். தமிழர்கள் இந்நிலையில் ஒன்றைக் கருத்தாக எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர்க்கு நேர்ந்த எல்லாத் தீமைகளும் வடதிசைப் பக்கமிருந்தே வந்துள்ளன. வேதகால ஆரியச் சூழல் இன்னும் அழிந்துவிடவில்லை. சமற்கிருதம் ஒருவேளை இந்திமொழிக்கு மாறாக ஒருமைப்பாட்டிற்குகந்த மொழியென்று வடவாரிய அரசால் கொள்ளப்படினும் கொள்ளப்படலாம். இந்தியத் தலைமையிடத்தை அடுத்தபடி ஒர் ஆரியப் பார்ப்பனன் பெற்றாலும் நாம் வியப்பதற்கில்லை. கூட்டுணர்வோடு ஆரிய பார்ப்பனர்கள் ஆற்றுகின்ற இனப் போராட்டம் மீண்டும் வெற்றி பெறுமானால் தமிழன் தன் இனத்தையே மறந்துபோக வேண்டியதுதான். ஏனெனில் தமிழனின் உள்ளத்தே இன்னும் இனவுணர்வும் மொழியுணர்வு இளமைப்