பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

வழியில்லையென்றால் அதற்கு பிராமணீயம் விதைத்த இன ஏற்றத்தாழ்வுகளைத் தவிர வேறு எந்தக் கரணியத்தையாவது எவராவது காட்ட முடியுமா? மக்களிடையே கல்வி பரவவில்லையென்றால், அதற்குப் பிராமணியம் ஊன்றிய மூடத்தனங்களைவிட வேறு ஏதுக்களை எந்த அறிஞனாகிலும் எடுத்துக்கூற முடியுமா? மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பொருளியல் ஏற்றத் தாழ்வுகளுக்குப் பிராமணியத்தைவிட வேறு தடையிருக்க முடியுமா?

எல்லா மக்கள் நிலையினின்றும் தன்னைத் தனிப்படுத்திக் கொண்டு, வேறு பிரித்துக்கொண்டு, காப்பமைத்துக் கொண்டு பிராமணியம் முன்னேறியதை பிற இன முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இட்டதை வரலாற்றடிப்படைகளைக் கொண்டு எந்த அறிஞனாகிலும் இல்லை என்று மெய்ப்பிக்க முடியுமா? வானத்தினின்று. பொழிகின்ற மழைக்கும், மண்ணிலிருந்து விளைகின்ற பயிர்க்கும் ‘வருணபகவானும்’ ‘பூமாதேவியுமே’ கரணிய கருத்தாக்கள் என்று பிராமணீயம் இட்டுக்கட்டிப் பேசியிருக்கவில்லையானால் இந்நாட்டில் அறிவியல் வளர்ந்திருக்குமா, வளர்ந்திருக்காதா? அவர்களால் கண்டு காட்டப்பெற்ற ‘சரசுவதிதேவி’ இங்கிருந்த மக்களின் நாவிலும் நெஞ்சிலும் வந்து நின்றாலொழியக் கல்வியருள் கிடைப்பது அரிது என்னுமொரு கருத்தை இந்த பிராமணர்கள் பரப்பியிருக்கவில்லையானால், இந்த நாட்டில் எத்துணையளவு கல்வி முன்னேறியிருக்கும் பணம் பெருத்தவனாகவும் பஞ்சையாகவும் ஒருவன் வாழ்வதற்கு அவனவன் முற்பிறவியிலே செய்த வினைகளே கரணியமென்றும், அதற்கு ‘இலட்சுமி’யின் (இந்தச் சரசுவதி, இலட்சுமி போன்ற கற்பனைக் கடவுள்களைக் ‘கலைமகள்’ என்றும், தூயதமிழ்ப் பெயர்களாகக் குறிப்பிட எனக்கு மனம் வரவில்லை.) கடைக் கண் அருள் வேண்டும் என்று இந்த ஆரியப் பார்ப்பனர் பிதற்றியிருக்கவில்லையானால், இந்த நாட்டில் பொதுவுடமை பூத்திருக்குமா? பூத்திருக்காதா? இப்படிப்பட்ட பிராமணியப் பூசல்களை இன்னமும் இந்த நாட்டில் வைத்துக்கொண்டு, அவற்றை ஆண்டுதோறும் தவறாமல் நினைவூட்டிக்கொண்டு, மேனாடுகளைப்போல் இந்த நாட்டில் கல்வி வளரவில்லை, செல்வம் செழிக்கவில்லை, பொதுவுடைமை பூக்கவில்லை என்று கூறித்திரியும் மடயர்களை, மடயர்கள் என்று சொல்வதால் என்ன பிழையேற்பட்டுவிட்டது என்று எவனாவது கூற முடியுமா?

பிறந்து கொப்பூழ்க்கொடி அறுபடும் நேரத்திலிருந்து, இறந்து மண்ணைப் போட்டு மூடும்வரை, இங்குள்ள ஒருவனின் அல்லது ஒருத்தியின் மேல் பிராமணியம் எவ்வளவு ஆட்சி செலுத்தி வருகின்றது