பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

படிக்கக் கேட்டாலும் அவர்கள் முன்னேறி விடுவார்களா? இராசாசியும், காமகோடியும் கூறும் ‘ஆன்மீக’மும், ‘பக்தி’யும் அவர்களுக்கு எந்த வகையில் கைகொடுத்துதவும்? அல்லது இதுவரை உதவின? இவற்றைப் பற்றியெல்லாம் ஏன் இவர்கள் தங்கள் ‘கல்கி’களிலும் ‘ஆனந்தவிகடன்’களிலும், ‘துக்ளக்’களிலும் எழுதித் தீர்க்கவில்லை? ‘பார்ப்பான்’ என்றாலோ ‘ஆரியன்’ என்றாலோ கீழ்ப்பாய்ச்சிக்குமேல் ஒரு தார்ப் பாய்ச்சை வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரும் இவர்கள், இராமாயணமும் மகாபாரதமும் பகவத்கீதையுந்தாம் இந்த நாட்டை முன்னுக்கு கொண்டுவரும் என்றால் துணிந்து வெளிப்படையாக ‘ஆம்’ என்று அவர்கள் அச்சுப்பொறியில் அச்சுப்போட்டுக் காட்டட்டும். இல்லையானால் ‘இல்லை’ என்று வெளிப்படையாக எழுதிக் காட்டட்டும்.

“ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே தமிழன் அடிமையாகவே இருந்தான்; இன்னும் இருப்பான்; அவன் அடிமடியும் நெஞ்சாங்குலையும் என்றென்றைக்குமே நம்முடையவைதாம்; எனவே அவன் நெஞ்சில் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் விதைப்போம்; அவற்றின் விளைவை அவன் அடிமடியிலிருந்து அறுப்போம்’ என்று ஆரியப் பார்ப்பனர்கள் இன்னும் நம்பிக் கொண்டிருப்பார்களானால், அவர்கள் இந்தத் தலைமுறையைத் தங்கள் இறுதித் தலைமுறையாக எண்ணிக் கொள்ளட்டும். இப்பொழுதுள்ள வீடனத் தமிழர்களையே தங்கள் இறுதி அடிமைகளாகக் கருதிக் கொள்ளட்டும் இல்லையெனில் இனிமேலாகிலும் தங்கள் மதக் குப்பை, கூளங்களான ‘வேத’ ‘புராண’ங்களையும், ‘இராமாயண, மகாபாரதங்’களையும் எடுத்துக் கொண்டு போய் இலெனின் கிராடிலோ, கென்னடி முனையிலோ குவித்துக் கொளுத்தட்டும். அந்தச் சாம்பலை ‘வால்கா’விலும் பசிபிக்கிலும் கரைத்து விடட்டும். ஏனென்றால் இந்தச் சாம்பல் எருக்கூட – தமிழக மண்ணின், அல்லது இந்திய மண்ணின் விளைச்சலைக் கெடுத்துவிடும்.

இங்குள்ள ஆரியப் பார்ப்பனர்களை எவரும் வெறுக்கவில்லை. அப்படி இங்குள்ளவர்களில் எவரும் முழுக்க முழுக்க, நூற்றுக்கு நூறு ஆரியர்களும் இல்லை. அவர்கள் நாடிநரம்புகளில் ஒடிக் கொண்டிருப்பது முழுக்க முழுக்க ஆரிய அரத்தமும் இல்லை. அவற்றில் பண்டைத் தமிழர்களின் அரத்தமும் கலந்து ஒடுகின்றது. எனவே நாங்கள் வெறுப்பது, குறைகூறுவது, திருந்திக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டுவது ஆரியத்தை, ஆரியப் பார்ப்பனியத்தை – இன்னும் தெளிவாகவும் சரியாகவும் சொல்வதானால் பிராமணியத்தை! ஆமாம், படைப்புக் கருத்தா(!)வான பிரமனின் முகத்தில் உள்ள கருவாயினின்று