பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


நெருப்பில் புரட்டி உங்கள் முன் வைக்கின்றேன். கனிவான சொல்லைப் பேசத் தெரியாதவனல்லன் நான்; கண்ணியமாக எழுதி மக்களைக் குளிப்பாட்ட உணராதவனல்லன் நான்; காற்றைப் போலும் நீரைப்போலும் சொற்களைப் பயன்படுத்த என்னால் முடியும். இருந்தாலும் நெஞ்சத்தை மறைத்துப் பேசும் இயல்பு எனக்குச் சொற்களால் புனைந்துரைத்து நல்ல பெயர் தேடிக்கொள்ளுவோர் பார்ப்பனர்களாகவோ அல்லது அவர்களின் பாங்கர்களாகவோதாம் இருக்க முடியும். என்னைப்போல் ஆரியத்தால் நெருக்குண்ட, நசுக்குண்ட ஏழைகளின் கூட்டத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியாது.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வோரடி மண்ணிலும் ஆரிய நச்சு துவப் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு மனத்திலும் ஆரிய நினைவுகள் அலைமோதுகின்றன. தமிழ் கற்றவனாயினும் சரி, அறிவியல் ஆய்ந்தவனாயினும் சரி, மருத்துவ மண்டையாயினும் சரி, வானூர்தி வலவனானாலும் கப்பல் மீகாமனானாலும், படைத் தலைவனானாலும் சரி, எல்லாருடைய நடை, உடை, தொழில், அறிவு, மனைவாழ்வு யாவற்றிலும் ஆரிய நச்சு நன்கு பாய்ச்சப்பட்டுக் கிடக்கின்றது. பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போன்று ‘நான்கு பக்கமும்’ வேடர் சுற்றிட நடுவில் சிக்கிய மான்போல்’ தமிழனின் அகம், புறம், உயிர், உடல் யாவும் ஆரிய வலையால் பின்னப்பட்டுக் கிடக்கின்றன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் பிராமணீயம் அவனை வாட்டி வதைக்கின்றது. பண்டையில் அன்று; இன்றுங்கூட அவனை ‘அது’ நாள்தொறும் கொட்டி வருகின்றது. அச்சு வடிவில் தாளிகைகளாக ‘அது’ விற்கப்படுகின்றது. செய்தி வடிவில் ‘அது’ விளம்பரப்படுத்தப்படுகின்றது. வானொலி உயிர்ப்பில் ‘அது’ பீச்சப்படுகின்றது. பள்ளிப் பொத்தகங்களில், கோயில் குளங்களில் பிராமணியம் தன் நச்சுக் கைகளைப் பரப்பியிருக்கின்றது. ‘இராகு’ காலம் பார்க்காமல் தமிழன் காலெடுத்து வைப்பதில்லை; முழுத்தம் பாராமல் அவன் மனைவியொடு கூடுவதில்லை; பிள்ளையார் சுழியிடாமல் அவன் எழுதத்தொடங்குவதில்லை; ‘நீறு’ ‘நாமம்’ என்ற பெயரால் அவன் நெற்றிகளிலும், ‘கொட்டை’ ‘மணி’ என்ற பெயரால் அவன் கழுத்துகளிலும், பிராமணீயம் நெளிந்து புரள்கின்றது. எல்லாம் வல்ல இறைப் பேராற்றல் ஒன்றுண்டு என்ற தூய அறிவியல் உண்மை, ‘சிவ’மாகவும் ‘மாலி’யமாகவும் ஆரியப் பூச்சுகளால் பல்லாயிரங்கோடி வடிவங்கள் கொண்டு மக்களை மருட்டி