பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்



ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

ரியப் பார்ப்பனர்கள் அளவில் சிறிய இனத்தவராயினும், அவர்கள் இந்தியாவை - குறிப்பாகத் தமிழ்நாட்டைக் கெடுப்பது போல் வேறு எந்த இனமும் கெடுக்கவில்லை. அரசியலிலாகட்டும் பொது வாழ்வியலிலாகட்டும் அவர்களின் திருவிளையாடல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இவைபற்றி ஏற்கனவே பலமுறை பலவாறு விரித்து எழுதியிருந்தாலும், அவர்களைப் பற்றிய தனி ஆய்வு இது. பொதுவாழ்வில் அவர்களால் மற்ற இனங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அல்லது அவர்களின் தலையீடுகள், அவற்றால் விளையும் கேடுகள் அளவுக்கு மீறி நடைபெறுவதால் இத்தகைய ஒரு தொகுப்பு நோக்கு தேவைப்பட்டது.

ஆரியப் பார்ப்பனர்கள் அல்லது பிராமணர்கள் எனப்படுவோர்க்கு இந்நாட்டில் ஒரு வரலாற்றுத் தொடர்பு உண்டு என்றாலும், அஃதெல்லாம் ஓர் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகாலச் சிறப்புடையதே. ஆனாலும் அவர்கள் வேதங்களிலும் பழங்கதைகளிலும் இத்தொடர்பு ஐம்பதினாயிரம் அறுபதினாயிரம் ஆண்டுகள் என்று கட்டியுரைக்கப் பெற்றுள்ளது. இதனால் பிற்காலத்து வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இவர்களைப் பற்றி உண்மை வரலாறு தெரியாமல், பலவகையிலும் தம்முள் வேறுபட நேர்ந்தது. வேதங்கள் அனைத்தும் கட்டு உரைகளே! அவற்றில் வரும் செய்திகள் யாவும் இவர்களின் வளமிகுந்த கற்பனை