பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

உரையாடல்களே! இந்நாட்டுப் பழங்குடிகளிடம் இவர்கள் நடத்திய போராட்ட வெறுப்புணர்ச்சிகளே இருக்கு வேத, அதர்வ வேத மந்திரங்களாக விளங்குகின்றன. எதிரிகளை வெல்வதற்கும் கொல்வதற்கும் இவர்கள் கொண்ட முயற்சிகளே – இவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு உணர்ச்சிகளே எசுர் வேத வேள்விகளாகக் காணப்படுகின்றன. அவற்றில் காணப் பெறும் சில பச்சையான அருவருப்பு நிகழ்ச்சிகளைக் கொக்கோக நூல்களிலும் காண்பதரிது. காட்டு விலங்காண்டிகள் போல் அவர்கள் நடந்துகொண்ட முறைகள் அவ்வேதங்களில் நன்கு வண்ணிக்கப் பெறுகின்றன. எனினும் இவர்கள் அவ்வேதங்களைத் தோற்றுவிக்கப் பெறாதவை (அநாதி) என்றும், தொன்றுதொட்டு வருவன என்றும்; இறைவனுக்கு முந்தித் தோன்றியவை என்றும் பொய்யுரையும் புளுகுரையும் கூறிப் பழங்கால மக்களை ஏமாற்றிவந்தனர்; இன்று வரை அவற்றையே திரும்பத் திரும்பக் கூறிக் கற்றவர்களையும் அறிஞர்களையும் ஏமாற்றப் பார்க்கின்றனர். வரலாற்றாசிரியர்கள் சிலரும் இவர்களின் மதிமயக்குப் பேச்சுகளில் நம்பி உண்மையைப் பறிகொடுத்துள்ளனர். வேதங்களை நேரிடையாகப் படிப்பவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருக்கின்றது. இருப்பினும் அவ் ‘வேத “புராண” இதிகாசங்’களை வைத்துக்கொண்டு ஆரிய இனத்தவரில் பெரும்பாலோர் பிழைத்து வருகின்றனர்.

தொடக்கக் காலத்திலிருந்தே ஆரியப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு அரசியலையும் வாழ்வியலையும் கெடுத்து வந்தமைக்கு அளவிறந்த சான்றுகள் உண்டு. இந்திய வரலாற்றில் அரசர்களின் வீழ்ச்சி குறிக்கப்படும் இடத்திலெல்லாம் பார்ப்பனியம் நடத்திய திருவிளையாடல்களை நன்கு உணரலாம். காலம் செல்லச் செல்ல இவர்களின் மேலாண்மைகள் ஓரளவு குறைந்துகொண்டே வந்தாலும், இன்றும் தனிப்பட்ட நிலையில் ஒவ்வோர் ஆரியப் பார்ப்பனனும் வேத கால ஆரியத்தினின்று எவ்வகையிலும் மாறுபட்டவன் அல்லன். அவன் மனத்திலும் நடவடிக்கைகளிலும் என்றும் தான் எல்லாரினும் படைப்பால் உயர்ந்தவன் என்பது பிறர் எல்லாரும் தனக்குக் கீழானவர் என்பதுமே காணக் கிடக்கின்றன.

அரசியல் நிலையில் அவர்கள் செய்கின்ற கீழறுப்பு வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆட்சியைப் பொறுத்த அளவில் பார்ப்பனர்கள் எக்காலத்தும் இருபிரிவினராகவே பிரிந்து