பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மொழி வளர்ச்சியில், ‘அவர்’களுக்குள்ள அக்கறையும், ‘நம்மவர்’க்குள்ள அக்கறைக் குறைவும்

ண்மையில் சென்னை நடுவண் நூல் நிலையக் கூடத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில், நம் கல்வியமைச்சர் உயர்திரு. நெடுஞ்செழியன் அவர்கள், தம் பேச்சுக்கிடையில், தமிழ் அகரமுதலித் திட்டத்தையும், அறிஞர்களையும் தாக்குவது போல் கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். தனியார் துறை ஓர் அகரமுதலித் திட்டத்தை மேற்கொண்டால், ஆராய்ச்சியாளர்கள் அதற்கு மிகுந்த ஒத்துழைப்புத் தருவதாகவும், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பை விரைந்து முடித்துக் கொடுப்பதாகவும், ஆனால் அத்தகைய ஒரு திட்டத்தை அரசு மேற்கொண்டால், அவர்கள் சுணக்கம் காட்டுவதாகவும், தங்களுக்கு “மிசை தரவில்லை! நாற்காலி தரவில்லை; வண்டி தரவில்லை” என்றெல்லாம். குறைப்பட்டுக் கொள்வதாகவும், ஒரு சொல்லை ஆய்வதற்கே நாள் கணக்கில், மாதக் கணக்கில் காலத்தை எடுத்துக் கொள்வதாகவும், இதனால் அரசுக்கு வீண்செலவு ஆவதாகவும், கிண்டலாகக் குறைகூறிப் பேசியுள்ளார். இந்தப் பேச்சிற்கு அடிப்படையான