பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


பகைவர்களாகவும் மாறித் தம்மால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தொல்லைகளைக் கொடுத்து, நம்மை ஒழிக்கவும், அழிக்கவுமே முற்பட்டு விடுகின்றனர்.

நம் நடுவணரசும், வடநாட்டவரின் நடவடிக்கைகளும், இவ் விந்திய நாரிகத்தையும், பண்பாட்டையும், இங்கு வழங்கிவரும் மொழியினங்களையும், பிற சிறப்பியல்புகளையும், ஆரியத் தொடர்புள்ளவனாகவும் சமசுக்கிருத அடிப்படை யுள்ளனவாகவுமே காட்டி, இந்தியாவையே ‘ஆரிய’மயமாக்குவதில் பெரிதும் அக்கறையுடன் திட்டமிட்டு இயங்கி வருகின்றன. இந்நிலைகளைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் நம் அமைச்சர்கள், தங்கள் தங்கள் பெயர்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும், தங்கள் சிலைகளைத் திறந்துகொள்வதற்கும், பிறந்த நாள்களைக் கொண்டாடுவதற்கும் செலவிட்டு வரும் நேரங்களும், தொகைளும் கொஞ்சநஞ்சமல்ல. ஆரியப் பார்ப்பனர்களும், நடுவணரசும் தங்கள் ஆக்கத்திற்கும் மேலாண்மை க்கும் அடிப்படையாக விளங்கும் சமசுக்கிருத மொழிக்கும், வேத புராணப் பரப்புதல்களுக்கும் செலவிடும் தொகைகளையும், நேரங்களையும், முயற்சிகளையும் நினைத்துப் பார்க்கையில், நம் அமைச்சர்களும் அவர்தம் அடிப் பொடிகளும் செய்துவரும் ஆக்க முறையற்ற வினையாரவாரங்களும், தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செய்வதாகத் தம்பட்டமடித்துக் கொள்ளும் விளம்பர வினைகளும் நடுநிலையான கண்களுக்கு எத்துணைப் பயனற்றவை என்பது புலப்படாமற் போகாது.

நடுவணரசு உதவியுடன் இன்று நாடெங்கும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் சமசுக்கிருத மொழியைக் கற்பிக்கின்றன. தேசிய சமசுக்கிருத நூல்நிலையமொன்றை நிறுவும் திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றது. தமிழ்மொழிக்கென்று முழுமையாக ஒரு பல்கலைக் கழகமும் துணைநில்லாத இற்றை நிலையில் ஏறத்தாழ, 600 பேர்களுக்கே பேச்சு மொழியாக உள்ளதாக, அரசுப் புள்ளி விளத்தங்களில் குறிப்பிடப் பெறும் சமசுக்கிருத மொழிக்கென்று தனிப் பல்கலைக் கழகமொன்றைத் தென்னாட்டுப் பகுதியில் நிறுவ, நடுவணரசு திட்டமிட்டு வருகின்றது. இந்தியாவில் உள்ள எண்பத்தாறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ 60 பல்கலைக் கழகங்களில் சமசுக்கிருதம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்ப் படிக்கப் பதினொரு பல்கலைக் கழகங்கிளல் மட்டுமே வாய்ப்புண்டு. திருப்பதியில் இந்திய அரசால் நடத்தப்படும் ‘கேந்த்ரீய சமசுக்கிருத